சூப்பர்ஸ்டாரை முழுவதும் புரிந்து கொள்ளாமல் திட்டாதீர்கள்!
எனக்கு விளக்கம் கொடுக்க பொறுமையில்லை.அதனால் இட்லிவடை பதிவை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்த வீடியோவை மொழி புரிந்து,,உணர்ந்து கொண்டாலே எந்த குறையும் இல்லாத
சூப்பர்ஸ்டாரை நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள்.
தலைவா!! நானும் உங்களை குற்றம் சொல்லி இருப்பதை நினைத்து வருத்தப் படுகிறேன்!http://idlyvadai.blogspot.com/
5 Responses to "சூப்பர்ஸ்டாரை முழுவதும் புரிந்து கொள்ளாமல் குற்றம் சொல்லாதீர்கள்!":
கிரி தலைவரை குறைசொல்லுறவங்க சொல்லட்டும்.ஆனா நம்மள மாதிரி உண்மைய தெரிஞ்சவங்க உண்மைய சொல்லித்தானே ஆகோனும்.(இது நிச்சயமா கொங்குதானுங்க)
எதையாவது போட்டுத்தொலைக்குகனும்னு இல்லாம நிசத்த பேசுவீங்களா?(இது மதுர ஸ்லாங் தானே?)
என்னை பொறுத்தவரையில் ரஜினி என்பவர் இனி நடிகராக மட்டும் கருதப்படுவார். மொல்ல தலீவா என்பதை விடுங்கள்... பதிவர்களுக்கு யாரும் தலைவன் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நானும் இத்தவறுகளை செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன். வேட தாரிகளை நம்பாதீர்கள்..
thirunthaatha jenmangal irunthenna laapam. anegamaaga kuselan rajiniyin kadaisi padamaaga irukkalam.
நல்ல தந்தி ரஜினி அதற்க்கு விளக்கம் கொடுத்தாலும் யாரும் அதை கேட்கும் மன நிலையில் இல்லை அப்படி எதிர் பார்ப்பதும் நியாயம் இல்லை, ரஜினியை நான் புரிந்து கொண்டதாலேயே நீங்கள் அவசரப்பட்டு கூறியதை போல என்னால் கூற முடியவில்லை, தற்போது அவசரப்பட்டு திட்டியவர்களும் கோப பட்டு வார்த்தையை விட்டவர்களும் தாங்கள் செய்த அவசரத்திற்கு நியாயம் கற்பிக்கலாம், அல்லது ரஜினியை திரும்ப குறை கூறலாம்.
அவ்வாறு பேசுபவர்களிடம் நான் எந்த நியாயமான வார்த்தையையும் எதிர் பார்க்க முடியாது, அதனாலேயே நான் எந்த கருத்தையும் கூறவில்லை, விமர்சனம் கூட இன்று தான் போட போகிறேன். எல்லோரும் அமைதி அடைந்த பிறகு.
தற்போது கேட்கிறேன் அவசரப்படுகிறவர்கள் யார்?
அதுவும் இல்லாமல் இப்படி கூறினால் அதை புரிந்து கொள்ளாமல் ஆபாசமாக பேசி தங்கள் தமிழ் பற்றை காட்டுபவர்களே அதிகம். அதனாலேயே நான் எதுவும் கூறவில்லை. தற்போது கூட எனக்கு இங்கு கூற விருப்பம் இல்லை. ஆனால் நீங்கள் என் பெயரை கூறி இருப்பதால் கூற வேண்டியதாக போய் விட்டது. ஆபாசமாக பேசி ஒரு வரை முறை இல்லாமல் தாறு மாறாக விமர்சனம் செய்வது தான் எதிர்ப்பு என்று கடந்து 3 நாட்களில் தான் தெரிந்து கொண்டேன்.
ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது, அனைவரும் கமலை பற்றை தாறுமாறாக விமர்சனம் செய்த போது நான் எழுதிய விமர்சனம் படித்தவர்கள் நான் ரஜினி வெறியன் அல்ல ரசிகன் என்பதை புரிந்து கொண்டு இருப்பார்கள். புரிந்து கொள்ளாதவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. அதே போல என்ன பேசினாலும் ரஜினிக்காக இப்படி பேசுகிறாயே என்று நீ எல்லாம் எப்போது திருந்த போகிறாய் என்று கேட்பவர்களுக்கு .... வரை முறை இல்லாமல் விமர்சனம் செய்தது நியாயம் என்றால் இதிலையும் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்.
தற்போதும் கூறுகிறேன் கொடி பிடித்து பால் அபிஷேகம் செய்யும் ரஜினி வெறியன் அல்ல,நிறை குறைகளை ஒத்துக்கொள்ளும் ரசிகன்.
அன்புடன் கிரி
//Amal said...
thirunthaatha jenmangal irunthenna laapam. anegamaaga kuselan rajiniyin kadaisi padamaaga irukkalam.//
ஏன் K வைப் போடவில்லை!
Post a Comment