இந்து கடவுள்களை திட்டித்தீர்ப்பது மட்டுமே பகுத்து உணரும் அறிவாகிய பகுத்தறிவு என்பதை நமக்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் மீண்டும் உணர்த்திய பகுத்தறிவர் ஸ்டாலின் வாழ்க!
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில், நேற்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்க்கா ஆகியோர் காணிக்கை அளித்து, பிரார்த்தனை செய்தனர். தென் தமிழகத்தின் புகழ் பெற்ற, 425 ஆண்டுகள் பழமையான, தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, ஜூலை 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர்ப்பவனி இன்றிரவு நடக்கிறது.
நேற்று மதியம் பனிமய மாதா பேராலயத்திற்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், தனது மனைவி துர்க்காவுடன் வந்தார். அவர்களை பேராலய பங்குத்தந்தை ஜெராசின் கற்றார், உதவி பங்குத்தந்தை செல்வம் வரவேற்றனர். அமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்க்கா ஆகியோர் பனிமய மாதா சொரூபத்தின் அருகில் சென்று பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, அவர்கள் மாதாவிற்கு காணிக்கை (மஞ்சள் வண்ணம் புத்தர் போட்ட மேலாடைத் துணியின் வண்ணம் என்பதால்! ஹி..ஹி ஹி)செலுத்தினர்.
நன்றி: தினமலர்
பகுத்தறிவுப் பகலவன் - ஸ்டாலின்!
Posted on Tuesday, August 5, 2008
by நல்லதந்தி
Subscribe to:
Post Comments (Atom)
10 Responses to "பகுத்தறிவுப் பகலவன் - ஸ்டாலின்!":
ஹி ஹி ஹி. பகுத்தறிவு பகலவன் என்பது தந்தை பெரியாரை மட்டுமே குறிக்கும் என்பது கூட தெரியாமல் இப்படி ஒரு பதிவு.
ஸ்டாலின் election சமயத்தில் சென்னை கோவில்களில் பிரசாதம் வாங்கிய படங்கள் ஏற்கனவே தினமலத்தில் வந்துள்ளது.
இந்த குசும்பு எதுக்கு ஓய்?
//ஹி ஹி ஹி. பகுத்தறிவு பகலவன் என்பது தந்தை பெரியாரை மட்டுமே குறிக்கும் என்பது கூட தெரியாமல் இப்படி ஒரு பதிவு.//
அடங்கொப்புறானே! பகுத்தறிவு பகலவன் என்ற பெயர் பெரியாரைக் குறிக்கிறதா?
எனக்குத்தெரியவேத் தெரியாதே!. பல வருடங்களுக்கு முன்பே கெஜட்டில் பெயரை மாற்றிக்கொண்டாரா?
அல்லது அவரது அப்பா ராமசாமியென்ற பெயரை மாற்றி வைத்தாரா?
அவருக்கே நீங்கள் செய்யும் கூத்துக்கள் ஒரு வேளை வேடிக்கையாகக் கூட இருக்கலாம்.
:))))))))))))))))))))))))
//இந்த குசும்பு எதுக்கு ஓய்?//
வெங்காயத்தை உரிச்சிப் பாக்கலாமேன்னுதான்! :)))))))))))
//ஸ்டாலின் election சமயத்தில் சென்னை கோவில்களில் பிரசாதம் வாங்கிய படங்கள் ஏற்கனவே தினமலத்தில்(இதை தினமலர் என்று சொன்னால்,உங்கள் தகுதி (உயர்ந்து)குறைந்து விடுமா என்ன?(நல்ல தந்தி) வந்துள்ளது.//
கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்தோடு(மனைவி மற்றும் அதன் சுற்றத்தாரோடு மட்டும்) திருவாரூரில் குலதெய்வக் கோயிலுக்குக் கூடச் சென்றார்.திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு துணைவியோடு சென்றுள்ளதும் தெரியும் தெரியாத ஒரே விஷயம் அவரது பகுத்தறிவு மட்டும்தான்.
அதுதான் அவருடைய ஒரே தமாஷ்!.
வெங்காயத்தை உரிச்சிப் பாக்கலாமேன்னுதான்!
:-)
//மாதாவிற்கு காணிக்கை (மஞ்சள் வண்ணம் புத்தர் போட்ட மேலாடைத் துணியின் வண்ணம் என்பதால்! ஹி..ஹி ஹி)//
:-)
ராமசாமி என்பவருக்கு பெரியார் என்ற சொல்லே ஒரு பட்டம்.அந்த பட்டத்துக்கு பட்டம் தான் பகுத்தறிவு பகலவன்.கொடுமைடா சாமீ!.தலைய சுத்துது!.
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
//கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com///
உங்கள் சேவை மிகவும் பாராட்டுக்குறியது!
Post a Comment