முதற்பகுதி பகுதி - ஒன்று
கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்- அத்தியாயம் - ஒன்று.
பூர்வகாலத்தில் நம்ம முன்னோர்கள் திருவண்ணாமலையில் இருந்தவர்கள்..... திருவண்ணாமலை ராஜ வம்சத்தர்களுடையவும்,பிறகு செஞ்சி நாயக அரசர்களுடையவும் சம்ரக்க்ஷணையில் பரம்பரையாக இருந்தவர்கள். அவர்கள் திருவண்ணாமலையை விட்டு இன்ன காலத்தில் சத்தியமங்கலத்திக்கு வந்தார்கள் என்றும்,இன்ன காரணம் பற்றி வர வேண்டியதாயிற்று என்றும் சரித்திர சம்பந்தமாகவுள்ள சில முக்கிய சங்கதிகளை நான் சுருக்கிச் சொல்வதவசியம்.
மகம்மத் டோக்ளாக்கு டில்லி சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் மத்திய இந்தியாவில் "டெக்கான்" முழுவதும் அவனுடைய ஜெனரல்களுடைய ஆட்சிக்குள்ளாகியது.......
1335-ம் வருஷத்தில் ஸ்தாபிக்கப்படலான விஜயநகர ராஜ்யம் நாளுக்குநாள் விருத்தியடைந்து,அளவற்ற செல்வமும்,கீர்த்தியும் பெற்றது.டில்லி சக்கரவர்த்திகள் முதலாய் அஞ்சும்படி 230 வருஷ காலம் வம்ச பரம்பரையாக துரைத்தனம் செய்து வந்தார்கள்.
இப்படியிருக்கையில், (டெக்கான்) மத்திய இந்தியாவில் பீஜப்பூர், கோல்கொண்டா,அஹெமெத் நகர் மகம்மதிய ராஜாக்கள் ஒன்று கூடி 1565-ம் வருஷத்தில் "தாலிகோட்" என்னுமிடத்தில் விஜயநகர மகாராஜாவுடன் பெரும் போர் புரிந்து மகாராஜாவைக் கொலை செய்து விஜயநகரத்தைப் பாழாக்கி விட்டார்கள்.
அந்த மகாராஜாவினுடய சகோதரர் ஒருவன் மகம்மதிய ராஜாக்களுடைய சம்மதியின் பேரில் சந்திரகிரியில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டான். மதுரை,தஞ்சாவூர்,செஞ்சிக்கோட்டை ஆகிய இவைகளில் இருந்து துரைத்தனம் செய்து வந்த நாயக்க அரசர்கள் இவனுக்கு கீழ்ப்பட்ட ராஜாக்களானார்கள்.
விஜயநகரம் தோல்வி அடையவே ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ராஜாவுடைய பலம் குறைந்து போயிற்று.அவனுடைய ஆட்சிகுட்பட்டு ஒரு சிறு பாளையபட்டுக்கு தலைவராக இருந்து நாளாவட்டத்தில் பலமடைந்த ஒருவன்,தன் எஜமானிடமிருந்து மைசூர் சீமையை அபகரித்துக் கொண்டு தானே ஸ்ரீரங்கப் பட்டணத்திலிருந்து துரைத்தனம் செய்து வரலாகிறான்.இப்போது மைசூர் தேசத்தையாளும் மகராஜா இவருடைய சந்ததியியைச் சேர்ந்தவர்.
ஸ்ரீரங்கப் பட்டணத்தின் ஆட்சிகுட்பட்ட கோயமுத்தூர்,சேலம் அடங்கிய கொங்கு நாட்டை அதே காலத்தில் மதுரை அரசரான வீரய்ய நாயக்கன் கட்டிக் கொண்டான். இது முதல் மைசூர் அரசனுக்கும் மதுரை அரசனுக்கும் ஓயாமல் போர் நேர்ந்தது.மைசூர் படைகள் மலைக் கணவாய்களின் வழியாக கொங்கு நாட்டுக்குள் நுழையாதபடி கணவாய்களின் அடிவாரங்களில் டணாய்க்கன் கோட்டை,சத்தியமங்கலம்,அந்தியூர்,காவேரிபுரம் ஆகிய இடங்களில் மதுரை அரசனான வீரய்ய நாய்க்கன் பலமான கோட்டைகளைக் கட்டி அவைகள் ஒவ்வொன்றிலும் காப்பு சேனைகளை நிறுத்தி சத்தியமங்கலம் கோட்டையில் இருந்து அந்த நாட்டை ஆளுவதற்கு ஒரு ராஜாவையும் ஏற்படுத்தினான்.
இப்படியிருக்கையில்" தாலிகோட்" யுத்தத்திற்கு பிறகு மகம்மதியர்---குதிரைப் படைகளை நடத்திக் கொண்டு அடிக்கடி திருவண்ணாமலை சீமைக்குள் கொள்ளையும்,கொடுமைகளையும் செய்து வந்தார்கள்.அவர்களை அடக்க சந்திரகிரி ராஜாவாலும் முடியவில்லை.இதனால் நம் முன்னோர்கள் திருவண்ணாமலையில் வசிக்க கூடாமல்,அதே காலத்தில் மதுரை ராஜ்யம் பலமுள்ளதாகி வடக்கே மலைவரிசைகள் வரை பரவி வீரப்ப நாய்கனுடைய துரைத்தனத்தில் ஜனங்கள் சமாதானத்துடன் வாழ்வது கேட்டு அவர்கள் மதுரைக்குச் சென்று வீரப்ப நாய்க்கனுடன் முறையிட்டுக் கொண்டார்கள்.
வீரப்ப நாய்க்கன் அவர்களைச் சத்தியமங்கலத்திற்கே அனுப்பி அங்கே கோட்டை வீரப்பன் பாளையம் என்ற பெயரால் ஒரு அக்ரகாரம் கட்டி அவர்களுக்கு கிரகதானம் செய்து அதற்கடுத்து மேல் புறம் இருக்கும் கொளத்தூர் கிராமத்தை சர்வமானியம் விட்டான்.இந்த சர்வமானியத்தை நம் முன்னோர்கள் வெகு காலம் அனுபவித்து வந்ததில் கடைசியாக அநேக வருஷ காலம் தரிசு கிடந்து குயிட் ரெண்டு(quit rent) செலுத்தப் படாமல் 1860-ம் வருஷம் சர்க்காருக்கு சேர்ந்து போச்சுது.
தொடர்ச்சி பிறகு...
9 Responses to "குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 2":
//வீரப்ப நாய்க்கன் அவர்களைச் சத்தியமங்கலத்திற்கே அனுப்பி அங்கே கோட்டை வீரப்பன் பாளையம் //
சத்தியமங்கலம்!! வீரப்பன் !!!
:)
// கோவி.கண்ணன் said...
//வீரப்ப நாய்க்கன் அவர்களைச் சத்தியமங்கலத்திற்கே அனுப்பி அங்கே கோட்டை வீரப்பன் பாளையம் //
சத்தியமங்கலம்!! வீரப்பன் !!!
:)
//
இணைச் சம்பவம்! :)
//" தாலிகோட்" யுத்தத்திற்கு பிறகு மகம்மதியர்---குதிரைப் படைகளை நடத்திக் கொண்டு அடிக்கடி திருவண்ணாமலை சீமைக்குள் கொள்ளையும்,கொடுமைகளையும் செய்து வந்தார்கள்.//
ஐய்யய்யோ மதநல்லிணக்கத்தை மீறிவீட்டீர்களே.மதவெறியைத் துண்டிவீட்டீர்களே.
நல்லதந்தியா...!!! தெறிச்சு ஓடு..... மனுஷன் சுடுகாட்டு ஆராய்ச்சியில இறங்கிட்டார்...
katahiya sollunga.
நம்ம ஊரு வரலாறு பாட புத்தகத்தில் ஏன் இந்த கதைகள் எல்லாம் போடுவதில்லை... ஏன் எல்லோரும் ரொம்ப நல்லவங்கன்னு போடுறாங்க...
//டிரவுசர் பாண்டி ... said...
நல்லதந்தியா...!!! தெறிச்சு ஓடு..... மனுஷன் சுடுகாட்டு ஆராய்ச்சியில இறங்கிட்டார்...//
மாப்பு வெச்சுட்ட்டியே ஆப்பு :)
//டிரவுசர் பாண்டி ... said...
நம்ம ஊரு வரலாறு பாட புத்தகத்தில் ஏன் இந்த கதைகள் எல்லாம் போடுவதில்லை... ஏன் எல்லோரும் ரொம்ப நல்லவங்கன்னு போடுறாங்க...///
அதான் முதல் பகுதியிலேயே முன்னுரையில் சொன்னமாதிரி, கிடைக்கிற தகவலை வெச்சித்தான் வரலாறே எழுதப்படுகிறது.
:)
Post a Comment