திங்கட்கிழமைக்கு அடுத்து செவ்வாய் கிழமை என்பது போல் வழக்கம் போல மீண்டும் குண்டு வெடிப்பு.
திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் குண்டு வெடித்தது.இது அன்புவாதிகளின் வழக்கத்துக்குரிய செயல் என்றாலும் இப்போது புதிதாக ஏன் திரிபுராவில் வெடித்தது என்று விசாரித்தோம்.
ஒரு பத்திரிக்கை நிருபரிடம் கேட்டபோது,இதில் என்ன இருக்கிறது,அன்புவாதிகளிடம் அகர்தலாவில் உள்ள சிலர் தாங்கள் சாக வேண்டும் என்றும் ஆனால் பூச்சி மருந்து வாங்கக் கூட கையில் காசு இல்லை என்று கதறி அழுததாகத்தெரிகிறது.எப்போதுமே இரக்க மனம் கொண்ட நமது அன்புவாதிகள் சிலர் தம் கைக் காசைச் செலவு செய்து அன்பு வெடிகுண்டைத் தயார் செய்து,எங்கிருந்து மேல் ஊர் போக வேண்டும் என்று அகர்தலாவாசிகளிடம் அன்புடன் வினவியதாகத் தெரிகிறது.
அந்த அகர்தலாவாசிகளும் ,அவர்களது வீடு இருக்கும் பகுதியில் இருந்தே போய்ச் சேர வேண்டும்,அப்பதான் பாடியை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகும் செலவு குறையும் என்று கூறியதாகத் தெரிகிறது.உடனே அன்புவாதிகளும் தம் கைக் காசு செலவு செய்து ஆட்டோ பிடித்து அகர்தலாவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குண்டு வைத்ததாகத் தெரிகிறது.
இதில் நெஞ்சை நெகிழவைக்கும் விசயம் என்னவென்றால் குண்டு வைத்தவுடன் அகர்தலாவாசிகளைப் பார்த்து நீங்கள் மேல்லோகம் போவதை எங்களால் கண்கொண்டு பார்க்கமுடியாது,எங்கள் மனம் தாங்காது என்று கூறி அழுதவாறே அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடிச் சென்றார்களாம். என்று அந்த அன்புவாதிகளின் கைக் காசு செலவு செய்து அகர்தலாவாசி மீது அவர்கள் காட்டிய கருணை ஈடு இணையில்லாதது என்றார்.
போலீசாரிடம் விசாரித்த போது அதெல்லாம் இல்லீங்க!.இந்த திரிபுராவில் எல்லோரும் ஏழையாகவும் கல்வியறிவு இல்லாமலும் முன்னே இருந்தாங்க,கிருஸ்துமத பாதிரிகளின் கருணையாலும்,வெளிநாட்டுக்கார புண்ணியவானுங்க நிறைய பணம் அனுப்பி படிக்க வைச்சதாலும்,கிருஸ்துவ மதம் மாறினாத்தான் படிப்பு வரும் அப்படிங்கறதாலே முக்கால்வாசிப் பேர் கிருஸ்வராக மாறிட்டாங்க.அதனால திரிபுரா இந்தியாவிலேயே பணக்கார மாநிலமா ஆயிடுச்சி!.
இப்போ உள்ளுரில் இருக்கிற கொஞ்ச நஞ்ச இந்துக்களுக்கு இந்து மத பண்டிகையெல்லாம் எப்படி கொண்டாடரதுன்னு மறந்து போச்சி!.இப்போ தீபாவளி கிட்ட வர்றதாலே பட்டாசு எப்படி வெடிக்கிறதுன்னு கத்துக் கொடுக்க அன்புவாதிகளிடன் கேட்டு இருக்காங்க போலிருக்கு.அவங்களும் வந்து பட்டாசு வெடிச்சி காமிச்சி இருக்காங்க! அவ்வளவுதான்!.என்றார்.
பின்குறிப்பு: இணையத்தில் தீவிரவாதிகளை தீவிரவாதிகன்னு எழுதறத்துக்கு இப்போ ரொம்பப்பேர் எதிர்க்கிறாங்க.இவங்களுக்கு அவ்வளவு அன்பு அவங்க மேலே.நானும் எதுக்கு வம்புன்னுட்டு அவங்க பேர மாத்திட்டேன். என்ன கொடுமை சார் இது!
வந்த செய்தி!
நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில், தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிலும் நேற்று தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
மகாராஜாகஞ்ச் பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட், ராதாநகர் பஸ் நிலையம், ஜி.பி.பஜார், கிரிஷ்நகர், மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் புறநகர் பகுதியான அபயநகர் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இரவு 10 மணிக்கு மேலும் இரு இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் ஒரு இடத்தில் வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
முதல் குண்டு ராதாநகர் பஸ் நிலையத்தில் வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். மற்றொருவர், சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் இறந்தார். 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ராதாநகர் பஸ் நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரு மர்ம மனிதர்கள் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டு இருந்ததாகவும் அவர்கள் அங்கிருந்து சென்ற இரண்டு மூன்று நிமிடங்களில் குண்டு வெடித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குறைந்த சக்தி கொண்ட வெடிபொருட்கள் இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்ததும் போலீசார் குண்டு வெடிப்பு பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக இந்திராகாந்தி நினைவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மார்க்கெட் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் 5 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த மாதம் 25-ந்தேதி மத்திய புலனாய்வு துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற, தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது யார் என்று இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
இதற்கிடையில் அகர்தலாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் டி.ஐ.ஜி. நேபாள்தாஸ், `ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி (ஹுஜி) இயக்க தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் செயல்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தார். சதிகாரர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
13 Responses to "அகர்தலாவில் அன்புவாதிகளின் அன்புப் பரிசு":
//அன்புவாதி//
சூப்பர் குத்து!
me the first!
ராபின் குல்லா சீக்கிரம் வாய்யா... அப்பதான் கச்சேரி களைகட்டும்.
காலையிலேயே கண்ணைக் கட்டுதே! :)
இப்படியே போன இந்தியா ல யாரும் பயமில்லாத நடமாட முடியாது போல! அன்புவதிகளின் அன்புத் தொல்லை அதிகமாயிகிட்டே வருது!
//krish said...
இப்படியே போன இந்தியா ல யாரும் பயமில்லாத நடமாட முடியாது போல! அன்புவதிகளின் அன்புத் தொல்லை அதிகமாயிகிட்டே வருது!//
இணையத்திலயும் இவங்க சேவை ஆரம்பமாயிடிச்சு போலிருக்கு,நாமெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல :)
இது வேதனைக்குறிய விஷயம். ஆனால் இவ்வாறு வேடிக்கையாக எழுத வேண்டிய நிலைமை நம்ம தந்தி அவர்களுக்குவந்துட்டுதே....
வாழ்க நம் பாரதத் தாய் திருநாடு.
இஸ்லாமிய தீவிரவாதிகளின் அட்டூழியத்திற்கு அளவே இல்லாமல் பொய் விட்டது .
அதற்க்கு உலகமெங்கிலும் உள்ள அறிவுஜீவிகளின் சப்பைக்கட்டு ஆதரவு வேறு !
பிறகு கேட்கவா வேண்டும் ?
இதுபோல் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் நேரடியாக பாதிக்கப்படும் போதுதான் அதன் வலி அவர்களுக்கு புரியும் !
கருணை உள்ள இறைவன் அதற்க்கு அருள் புரிவானாக !!!!
me the 9th
10th
:((
வேறு வழியில்லை,
வலிக்குது என்பதைக் கூட நாம் சிரித்து கொண்டே தான் சொல்ல வேண்டியிருக்கிறது
people like senthalal ravi who condemn bombings in srilanka seem to support killings in these cases.
Post a Comment