ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் ஒரு அரசியல் விளையாட்டு நடக்கப் போகிறது.இன்று நடப்பதாக இருந்த மனிதச் சங்கிலி வருகிற 24-ம் தேதி தள்ளி வைக்கப் பட்டு இருக்கிறது.நான் இதில் எதுவும் எழுத விரும்பவில்லை.எப்படியோ நம் இனத்தவரின் துயர் தீர்க்கப்பட்டால் சரி!.
பதினோரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்று ஒரு சடங்கு நடந்த போது ஆனந்த விகடன் எழுதிய தலையங்கத்தை கீழே படியுங்கள்.அது நடந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் எந்த வித மாற்றமும் இல்லாத ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.இதிலிருந்து இம்மாதிரியான பந்த்,மனித சங்கிலி போன்றவைகள் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளால் நடத்தப் படும் சம்பிரதாயமான சடங்குகள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
இனி தலையங்கம்- 08-06-1997 இதழில் வெளிவந்தது!.
பந்த் என்கிற சடங்கு!
பதினைந்து ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாகத் தமிழ்நாட்டில் இது வரை நடந்த ‘பந்த்’ எத்தனை என்பது கணக்கிடுவது கஷ்டம்!.அதனால் என்ன பலன் ஏற்பட்டது என்று கணிப்பதும் கஷ்டம்!. இப்போது மீண்டும் ஜூன் 6-ம் தேதி ஈழத்தமிழர்களுக்காக ‘பந்த்’ நடத்த திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஈழத்தமிழர் பிரச்சனையில் சிங்கள அரசியல்வாதிகள் ஒரு தலைப்பட்சமாக நடக்கும் அநீதி ஒரு புறம்.அதே நேரத்தில் ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் ஓரே இயக்கமாகக் காட்சிதரும் விடுதலைப் புலிகள் அமைப்பும்,’விரோதிகள் யார்...சகோதரர்கள் யார்....நண்பர்கள் யார்’ என்று புரியாமல் வெறித்தனமாகச் செயல் படும் இயக்கமாக மாறிவிட்டது.
ஈழத்தமிழர் வேதனை பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது.அதோடு,ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ஆதரவும்,இந்தியாவின் ஆதரவும் தேவையில்லாதது போல விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அமைந்து விட்டது!.
தமிழ்நாட்டின் குரலை சிங்கள அரசும் லட்சியம் செய்யாது.விடுதலைப் புலிகளும் காதில் போட்டுக்கொள்ளப் போவதில்லை.
இந்நிலையில்’பந்த்’ நம் கையாலாகாத நிலையை உணர்த்தும்! வெறும் சடங்காக நடந்து முடியும்!
10 Responses to "ஈழத்தமிழர்களுக்காக மனிதச்சங்கிலியும்! பந்த்களும்!":
இலங்கையில் நல்லது நடந்து விட்டால் இங்கே யாரும் அரசியல் நடத்த முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா.
அரசியல்வாதிகளால் "பந்த்" மட்டும்தான் நடத்த முடியும். அதனால ஒரு பிரயோஜனமும் இதுவரை ஏற்பட்டதில்லை.
தமிழகத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் "மக்கள் புரட்சி" என்று ஒன்று ஏற்பட்டால் அதுவே ஈழ தமிழர்களுக்கான விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும்..
//இலங்கையில் நல்லது நடந்து விட்டால் இங்கே யாரும் அரசியல் நடத்த முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா.//
இலங்கைப் பிரச்சனையாலெல்லாம் இங்கே ஓட்டு விழாது.அதனால் தான் இதை பத்தி எந்த அரசியல் வாதியும் கவலைப் படறதில்லை.அங்கே தமிழர்கள் அடித்துக் கொல்லப் படும் போது சும்மா இருந்தால் நல்லாயிருக்காதேன்னுதான் இந்த விளையாட்டெல்லாம்.இலங்கைப் பிரச்சனையை தீர்த்தால் எங்கள் ஓட்டு உங்gகளுக்கேன்னு தமிழ்நாட்டுத் தமிழர்கள் சொல்லட்டும்.அப்புறம் இலங்கைப் பிரச்சனையை முடித்து விட்டுததான் மறு வேலைப் பார்ப்பார்கள்.
//இலங்கையில் நல்லது நடந்து விட்டால் இங்கே யாரும் அரசியல் நடத்த முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா.//
ஆரம்பத்தில் எல்லா தமிழக அரசியல் வாதிகளுக்கும் ஈழத்தமிழம் அமைவதில் விருப்பம் இருந்தது.எம்.ஜி.ஆர் உள்பட!.பின்னர் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளால் அது இப்போது சடங்காகி விட்டது.
//தமிழகத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் "மக்கள் புரட்சி" என்று ஒன்று ஏற்பட்டால் அதுவே ஈழ தமிழர்களுக்கான விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும்//
எப்படி? :)
so, you put this post to say LTTE r bad with help of AV's old edition...
Happy???????
hic hic hic
//so, you put this post to say LTTE r bad with help of AV's old edition...
Happy???????
hic hic hic//
ippathaan puriyutha... nalla thanthiyin maththa pathivugala padichchu paarththaal mulukka purinjukkalaam :)
////தமிழகத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் "மக்கள் புரட்சி" என்று ஒன்று ஏற்பட்டால் அதுவே ஈழ தமிழர்களுக்கான விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும்//
எப்படி? :)//
சமீபத்தில் ராமேச்வரத்தில், ஈழ மக்களுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் உரையாற்றிய திரு.சேரன் மற்றும் திரு.சீமான் அவர்களின் பேச்சினை நேரம் கிடைத்தால் கேட்கவும்.
(அரசியல்வாதிகள் எந்த காரியத்தை செய்தாலும் உருப்படுவதே இல்லை.அந்த கடுப்பில் தான் அரசியல் வாதிகளின் தலையீடு இல்லாமல் என்ற கூற்றினை முன்மொழிந்தேன். )
நன்றி !
நல்ல நேரத்தில் வந்த நினை கூறும் பதிவு.
இன்று ஆனந்த விகடன் பத்திரிகை நடத்துபவர்கள் மனித சங்கிலியை பற்றி எழுதினால் , மிகவும் பாராட்டி , அதனால் இலங்கை தமிழர் பிரச்சினையை கருணாநிதி தீர்த்து வைத்து விட்டதாய் எழுதுவார்கள் .!
//வால்பையன்-இலங்கையில் நல்லது நடந்து விட்டால் இங்கே யாரும் அரசியல் நடத்த முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா.//
பொதுமக்கள் கொல்லப்படுகிறார்களே என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் தமிழீழம் வேண்டுமென்பது உங்கள் கருத்து என்று ஒருவருடைய பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ளீர்கள். புலிகளின் தமிழீழத்தால் தானே இவ்வளவு பேழிரவு இலங்கையில் நடக்கிறது. இலங்கையில் நல்லது நடக்க வேண்டும் என்றால் நீங்கள்
தமிழீழத்தை ஆதரிக்ககூடாது.
Post a Comment