தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கப்பற்படையினரால் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது.இதனால் தினம் தினம் செத்துப் பிழைக்கின்ற மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் சில நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தினார்கள்.விஜயகாந்தும் கலந்து கொண்டு தமிழக அரசின் கையலாகாதனத்தை சாடினார்.இதனால் அதிருப்தி அடைந்த தமிழக முதல்வர் மீனவர்களை அழைத்து வரும் 19ம் தேதி மீனவர் பிரச்சனையை தீர்த்துவைக்கப் போவதாக உறுதி கூறி பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைத்தார்!. அவர் எடுத்த உடனடி நடவடிக்கை பின் வருமாறு!.
தமிழக மீனவர்கள் பிரச்னையை "மத்திய அரசின் கவனத்திற்கு" கொண்டு வர, தி.மு.க., சார்பில், தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழக மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் அடிக்கடி கண்மூடித்தனமாக கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மனித உரிமை மீறல்களையும், கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் உரிமைகளையும் சட்ட விரோதமாக தடுத்து, நாள்தோறும் தமிழக மீனவர்களுக்கு பல்வேறு இன்னல்களை இலங்கை கடற்படை ஏற்படுத்தி வருகிறது.
இப்பிரச்னையை "மத்திய அரசின் கவனத்திற்க்கு" முதல்வர் கருணாநிதி பல முறை எடுத்துச் சென்றுள்ளார்.அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் தலைமையிலான குழு கடந்தாண்டு இலங்கை துணைத் தூதரை சந்தித்து இச்செயல்களை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்திய அரசு உடனே இலங்கை தூதரை அழைத்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதைக் கண்டிப்பான முறையில் குறிப்பிட்டு, கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திய கடற்படையும் கடலோர பாதுகாப்புப் படையும் இணைந்து பன்னாட்டு கடல் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் உடைமை சேதங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். "சார்க்' மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளும் போது இந்தியாவின் கவலையை இலங்கை அதிபரிடம் தெரிவித்து இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
இந்த தீர்மானங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் தி.மு.க., சார்பில் வரும் 19ம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் கடலோர நகரங்களிலும், ஊர்களிலும், மாவட்ட தலைமையிடங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்படுகிறது.இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளிவராத செய்திகள்: -
பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கலைஞரை,நிருபர்கள் விஜயகாந்தின் ஆவேசப்பேச்சைப்பற்றி,கேட்டபோது,காந்தி,இராஜாஜி போன்ற தலைவர்களுடன் அரசியல் நடத்திய நான் இப்போது இம்மாதிரியான விலாசம் தெரியாதவர்களோடு அரசியல் நடத்த நேரிட்டதே என்றென்னும் போது நெஞ்சமே வெடித்து விடும் போல் உள்ளது என்றார்.காந்தி,இராஜாஜி போன்றவர்களோடு நீங்கள் அரசியல் நடத்திய போது அவர்களும் இதே போல வருத்தப்பட்டார்களா?.என்று விபரம் புரியாத ஒரு நிருபர் கேட்டபோது ஆவேசம் அடைந்த கலைஞர், நீ யாருன்னு எனக்குத்தெரியும் வர்ரியா!.இராமேஸ்வரத்திலிருந்து "போட்"ல இரண்டு பேரும் மீன் பிடிக்க சிலோன் வரைக்கும் போகலாமா? என்றார்.அருகில் இருந்த அமைச்சர் வீராசாமி அந்த நிருபரை அன்போடு கழுத்தில் மன்னிக்க தோளில் கை போட்டு அறையை விட்டு அழைத்துச் சென்றார்.
தான் மீனவர்களுக்காக இதுவரை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கடிதங்களை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக கூறிய கலைஞர்,தான் தற்போது தமிழகமுதல்வராக ஆனபிறகு மட்டும் இருநூறு கடிதம் எழுதியாக விபரம் தந்தார்.இப்படி மீனவர்களுக்காக, கூட்ட்ணிக்கட்சி பிரதமர் என்றும் பாராமல் கடிதம் எழுதி தான் பிரதமரைத் துன்புறுத்தியதை சுட்டிக்காட்டினார்.சென்ற முறை தான் கடிதம் எழுதிய போது இலாகா அமைச்சராக இருந்த தாயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி,பிரதமரிடம் கடிதத்தை 10 நாட்கள் தாமதமாகத்தர தபால் ஊழியர்களை மிரட்டிய செய்தி, தனக்கு, அழகிரிக்கும் தயாநிதி மாறனுக்கும் பிரச்சனை எற்பட்ட பிறகுதான் தெரிந்ததென்றும்,அதனால் இம்முறை தாமதத்தை தவிர்க்க கடிதம் இ-மெயில் மூலமாகவே அனுப்பப்படும் என்றார்.மேலும் பிரதமர் இ-மெயிலைத் திறந்து பார்க்காவிட்டால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க அமைச்சர் வீராசாமி மடிக்கணினி எடுத்துக் கொண்டு இப்போதே டெல்லி விரைவார் என்றும் அவர் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை காட்டிவிட்டுத்தான் சென்னை திரும்புவார்.என்றார்.
நீங்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு,தொண்டனை மட்டும் போர்களத்திற்க்கு அனுப்பிவிட்டு கோடைவாசஸ்தலத்தில் உல்லாசமாக இருக்கும் தலைமை ,அண்ணா வழியில் வந்த எனக்குத் தெரியாது,அண்ணா எங்களை அப்படி வளர்க்க வில்லை!.என்றார்.
சமீபத்தில் கடலூரில் மகளிர் மாநாடு அணிவகுப்பை ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக பார்வையிட்டு பரவசத்துடன்,மக்களுக்காக உழைத்ததை ஆற்க்காட்டாரே பாரட்டியுள்ளார்.தமிழர்களுக்காக பாடுபடும் பத்திரிக்கைகளும் பாரட்டியுள்ளன.ஐந்து மணிநேரம் உழைத்த எனக்கு ஒன்பது மணிநேரம் உழைக்கத்தெரியாதா? என்றார்.
அடுத்த முறை இலங்கை கப்பற்படையினர் தமிழகமீனவர்களைத் தாக்கினால் மீண்டும் பிரதமருக்கு அன்றைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து ஆவேசமாகவோ, அன்பாகவோ கடிதம் எழுதப்படும் என்று கலைஞர் எச்சரித்துள்ளார்.மேலும் அடுத்த முறை உண்ணாவிரதப்போராட்டம் காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை எனபது 6 மணியிலிருந்து 5 மணி வரை என்று கடுமையாக்கப்படும் என்றும் ஆவேசப்பட்டார்.
சென்ற முறை நடந்த சேது சமுத்திர பந்த்(?!?) உண்ணாவிரதப் போராட்டம் போல் பாதியில் முடியாது என்பதால் தொண்டர்கள் வயிறார சாப்பிட்டு விட்டே உண்ணாவிரதப் பந்தலை அடையுமாறு தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
மீனவர் பிரச்சனை- - -நொடியில் தீர்வு கண்ட தமிழகமுதல்வர் கலைஞர்!
Posted on Friday, July 18, 2008
by நல்லதந்தி
Subscribe to:
Post Comments (Atom)
29 Responses to "மீனவர் பிரச்சனை- - -நொடியில் தீர்வு கண்ட தமிழகமுதல்வர் கலைஞர்!":
அப்டிப் போடு அருவாளை!
இது.. இது.. உண்மையான பதிவு!!
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று பேர் சொல்ல வேண்டும்.
ஆதாய அரசியல், அடுத்தவர்க்காக நிகழ்த்தும் கலைஞர் 80 வயதிலும் இப்படிச் செய்வது கேவலம்!
ஒவ்வொரு நாளும் சிங்களக் காடையர்களிடம் அகப்பட்டுச் சாகும் தனது சொந்த மக்களையே காப்பாற்ற வக்கில்லை. சும்மா படத்துக்கு கதை வசனம் எழுதுறதை விட்டுட்டு ஏதாவது பிரயோசனமா இருந்தாப் பாரும். வேணுமெண்டால் ஜெயலலிதாவையும் அவரது மனைவியான சசிகலாவையும் வம்புக்கிழுத்துப் பாரும். ஏதாவது நடந்தாலும் நடக்கும்.
Good Satire..
அண்ணே, காலையில இந்த உண்ணாவிரத அறிவிப்பை பார்த்ததும் நான் ஒரு பதிவு போடணும்னு நினைச்சேன், நீங்க முந்திகிட்டிங்க.
நீங்க சொல்லாத சிலதையும் நான் விரைவில் எழுதுறேன்.
நமக்கு எப்பேற்பட்ட ஒரு முதல்வர் கிடைச்சுருக்காரு பாருங்க.
இந்த அறிக்கையெல்லாம் சும்மா பூச்சாண்டி காட்டுற வேலை மட்டும் தான். தமிழக மீனவர்களும் கட்சிகளும் நடத்துகின்ற நடத்த போகின்ற ஆர்ப்பாட்டங்களால் இப்படி ஒரு அறிக்கை விடவேண்டி வந்ததேயல்லாமல் தமிழக மீனவர்கள் மீது அக்கறை என்று நினைத்து விட வேண்டாம். இவ்வளவு காலமும் பார்த்துக் கொண்டிருந்தவர் தானே.
அது மட்டுமல்ல மத்திய அரசு எதிர் நோக்கியுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று விடுமோ என்ற பயமும் மத்திய அரசின் போலித்தனமான நிhப்பந்தமும் தான் இதற்குக் காரணம்.
மத்திய அரசு தோற்றால் இனி இவர் என்ன செய்வாரோ தெரியவில்லை.
பிஜேபி உடன் கூட்டணி என்பது நடக்கக் கூடிய விடயமல்ல.
பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்பதுதான் தமிழர்கள் எதிர் பார்ப்பது.......
மன்னிக்க தோளில் கை போட்டு, அறை விட்டு அழைத்துச் சென்றார் ?
//அப்டிப் போடு அருவாளை!
இது.. இது.. உண்மையான பதிவு!!//
நன்றி VSK அவர்களே!
//வேணுமெண்டால் ஜெயலலிதாவையும் அவரது மனைவியான சசிகலாவையும் வம்புக்கிழுத்துப் பாரும். ஏதாவது நடந்தாலும் நடக்கும்.//
யாரைத்திட்டுகிறீர்கள் என்றே புரியவில்லை அனானி நண்பரே!.என்னையா? கலைஞரையா?
நன்றி!
//Good Satire..//
நன்றி!.அறிவன் சார்.
யாரைத்திட்டுகிறீர்கள் என்றே புரியவில்லை அனானி நண்பரே!.என்னையா? கலைஞரையா?
நன்றி!
- கலைஞர்
நன்றி நண்பர் ஜோசப் பால்ராஜ்!.
தங்கள் திரு அப்துல்லா அவர்களிடம் நடத்திய பூச்செண்டு ஆட்டத்தைப் பார்த்தேன்.அற்புதம்.ஆனால் அரசர் காலத்திலேயே இருக்கும் அவரிடம் வாரிசு அரசியலைப் பேசி புரிய வைப்பது மிகக் கடினம்.உங்களுடைய ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்!
//பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்பதுதான் தமிழர்கள் எதிர் பார்ப்பது.......//
நூற்றில் ஒரு வார்த்தை.
//மன்னிக்க தோளில் கை போட்டு, "அறை" விட்டு அழைத்துச் சென்றார் ?//
ஒரு எழுத்தில் இப்படி ஒரு குத்தா?
//காந்தி,இராஜாஜி போன்ற தலைவர்களுடன் அரசியல் நடத்திய நான் இப்போது இம்மாதிரியான விலாசம் தெரியாதவர்களோடு அரசியல் நடத்த நேரிட்டதே என்றென்னும் போது நெஞ்சமே வெடித்து விடும் போல் உள்ளது என்றார்.காந்தி,இராஜாஜி போன்றவர்களோடு நீங்கள் அரசியல் நடத்திய போது அவர்களும் இதே போல வருத்தப்பட்டார்களா?.என்று விபரம் புரியாத ஒரு நிருபர் கேட்டபோது ஆவேசம் அடைந்த கலைஞர், நீ யாருன்னு எனக்குத்தெரியும் வர்ரியா!.இராமேஸ்வரத்திலிருந்து "போட்"ல இரண்டு பேரும் மீன் பிடிக்க சிலோன் வரைக்கும் போகலாமா? என்றார்.//
சூப்பர்
நல்ல அங்கதம் :)
//தாமதத்தை தவிர்க்க கடிதம் இ-மெயில் மூலமாகவே அனுப்பப்படும் என்றார்.மேலும் பிரதமர் இ-மெயிலைத் திறந்து பார்க்காவிட்டால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க அமைச்சர் வீராசாமி மடிக்கணினி எடுத்துக் கொண்டு இப்போதே டெல்லி விரைவார் என்றும் அவர் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை காட்டிவிட்டுத்தான் சென்னை திரும்புவார்//
றீபீட்ட்டேய்!!!!!!!.
சரியான நக்கல்... சூப்பர் பதிவு...
அவங்கவங்க டாக்டர் சொன்னபடி, நடக்க, சாப்பிடாமெ இருக்க - இந்த மாதிரி மக்கள் பிரச்சினையை பயன்படுத்திக்கறாங்க...
கர்னாடக தேர்தல் காரணமாக ஒகனேக்கல் பிரச்சினையை தள்ளிப்போட்டவர் - இப்போ நம்ம மத்திய தேர்தல் முடியறவரைக்கும் இந்த பிரச்சினையை தள்ளிவைக்கலாம்னு நினைக்கறாரோ????
முல்லை தீவு .. சிச்சி தப்புத்தப்பு.. கச்ச தீவு அதை மீழ்க்க கோரி ஒரு போராட்டம்.
------
ஆளும்கட்சி சார்பாக எடுக்கபட்ட தீர்மானம்.
நாலை மறு நாள் "காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை" தோலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்காமல் புறக்கணிப்பது.
பின் குறிப்பு: முதலில் இரவு 10 மணிவரை தான் புறக்கனிப்பு என்று பேசப்படது.
உடனே எல்லா பெண்களும் "மானாட மயில் ஆட" நிகழ்ச்சி பார்க்காவிடால், அவர்கள் மூச்சே நின்னுபோய்விடும் என்று கூச்சல் போட்டதால். நேரம் இப்படி சுருக்கபட்டது.
---
எதிர்கட்சி சார்பாக எடுக்கபட்ட தீர்மானம் இந்த போராட்டம் பற்றி, பச்சைமலையில் ஓய்வாய் இருக்கும்,
நம் எதிர்கட்சி பாட்டிகளுக்கு .. சிச்சி தப்புத்தப்பு.. பார்ட்டிகளுக்கு செய்தி கிடைத்தஉடன், அவர்கள் சார்பாக போட்டி போராட்டம், பொது குழு கூடாமலே அறிவிக்கப்பட்டது.
அதாவது - அதே நாளில், எதிர் கட்ச்சி சார்பாக, "மாமனர் / மாமியார்களுக்கு" சோறு தண்ணி கொடுக்கா போராடம் அதுவும் - காலை 6 மணி முதல் இரவு 12.00 வறை.
முன் அறிவிப்பு: கட்சி உருப்பினர் யாரும் மீரி சோறு தண்ணி கொடுத்தால், அவர்கள் கையில் சுருட்டால் சூடு போடப்படும்.
---
நம்ம கெப்டன் அவர்கள் - புரசி தலைவர் வழியில் - கச்ச தீவு மேல் படையெடுக்கும் சாத்திய கூருகள் பற்றி - குடும்பதுக்குள்ளேயே கூடி திட்டம் தீட்டுவதாக செய்தி
கலைஞர் மீது மரியாதை இருந்தாலும் இந்த விஷயத்தில் அவரை எனக்கு பிடிக்க வில்லை, காரணம் ஒரு மொழியை எதிர்க்க தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர், கண்ணுக்கேதிரே ஒருவன் நம் தமிழகத்து ஆள் கொல்லபடுகிறான். அதை கேட்க நமக்கு நாதி இல்லை...அக்கறை தமிழனுக்கு கவலை பட நமது இறையாண்மை தடுக்கிறது,ஒததுக் கொள்வோம் இக்கரை தமிழனுக்கு கேள்வி கேட்க எது தடுக்கிறது????
செவிட்டில் அறைந்தாற்போன்ற அங்கதம்.
மக்கள் இளிச்சவாயர்களாக இருக்கும் வரை எதுவும் நடக்கும்.
தலைவர், அக் மார்க் காந்தியத்தைக் கடைபிடிக்கிறார்ங்க. அதாவது ஒரு குடும்பத்துக்குள்ளேயே நமக்கு ஒரு பிரச்சனையின்னா சாப்பிடாமா முரண்டு பண்றதுல்லையா , அது மாதிரி!
என்ன சாகுறது எவனோ படிக்காத மீனவர்கள் தானேங்க. ஆனால் இந்தியா இந்தியர்களின் பாதுகாப்பை யாருக்கும் விட்டுக்கொடுக்காதுன்னு அவங்க கிட்ட உறுதியா சொல்லத்தான் ஒரு ஆள் கொழும்புக்கு போறதுக்கு 4 கப்பல் நிறைய ஆட்களை கூட்டிக்கிட்டு போறமில்லங்க! இலங்கை புரிஞ்சுக்கும். இல்லாட்டி ஆளில்லாத உளவு விமானங்களை அனுப்பி இலங்கை கடற்படை சுடுறத வீடியோ எடுத்து, செத்துப்போனதை உறுதி செஞ்சுட்டு அப்புறமா நாடு தழுவிய உண்ணாவிரதம் இருந்து இலங்கைக்கு கடுமையான நெருக்கடிய கொடுப்போங்க.
என்ன ஓரு 200 பேர் (இது வரைக்கும்) செத்துருப்பாங்களா! நாட்டின் இறையாண்மைக்கு முன்னாடி இதெல்லாம் வெறும் தூசிங்க.
இன்னொன்னு விதின்னு ஒன்னு இருக்கு வாருங்க. நாம முழுக்க முழுக்க இலங்கை ராணுவத்தையே குறை சொல்ல முடியாதுங்க. பாவம் அவங்களும் டென்சன்ல இருக்காங்கல்ல. அவங்க டென்சன குறைக்கத்தான் நாம அப்பப்ப ஆயுதம் தந்து, புலிகளுக்கு வரும் ஆயுதசப்ளையை கரக்டா உளவு சொல்லி உதவுறோம். இருந்தாலும் டென்சன் தானுங்களே!
அதனாலதான் முதலமைச்சர் நிவாரண நிதியிலையும், பிரதமர் நேரடி நிவாரண நிதியிலையும் நிறைய பணத்தைப் போட்டு (ஒரு 1000 கோடி) இப்பவே வச்சுட்டோம். இனிமே காலதாமதம் இல்லாம சுட்டவுடனேயே செக் எழுத ஒரு செக் ஆபிசரையும் தமிழ்நாட்டு அரசு கருணையோடு நியமிக்கனும்னு உண்ணாவிரதம் இருக்கப்போகுது தி.மு.க.
என்ன இருந்தாலும் இறையாண்மை முக்கியமில்லீங்களா!
super suppu!!!
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் அனானி
//சரியான நக்கல்... சூப்பர் பதிவு...
அவங்கவங்க டாக்டர் சொன்னபடி, நடக்க, சாப்பிடாமெ இருக்க - இந்த மாதிரி மக்கள் பிரச்சினையை பயன்படுத்திக்கறாங்க...//
நன்றி நண்பர் ச்சின்னப்பையன் !
உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டீர்களா? :)
//அக்கறை தமிழனுக்கு கவலை பட நமது இறையாண்மை தடுக்கிறது,ஒததுக் கொள்வோம் இக்கரை தமிழனுக்கு கேள்வி கேட்க எது தடுக்கிறது//
நன்றி நண்பர் jackiesekar!
கலைஞர் தமிழர்களைப் பற்றி அரசியலுக்காக மட்டுமே கவலைப் படுபவர்.மனப்பூர்வமாக என்றைக்கும் கவலைப் பட்டதில்லை என்று அவரது அரசியலை கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
//முன் அறிவிப்பு: கட்சி உருப்பினர் யாரும் மீரி சோறு தண்ணி கொடுத்தால், அவர்கள் கையில் சுருட்டால் சூடு போடப்படும்.//
நன்றி நண்பர் வேக்கப்!
ஆனா தமிழையும் கொஞ்சம் காப்பாத்துங்க! :)
//செவிட்டில் அறைந்தாற்போன்ற அங்கதம்.//
நன்றி அனானி நண்பரே!.அங்கதம்னா நகைச்சுவையா?
//இனிமே காலதாமதம் இல்லாம சுட்டவுடனேயே செக் எழுத ஒரு செக் ஆபிசரையும் தமிழ்நாட்டு அரசு கருணையோடு நியமிக்கனும்னு உண்ணாவிரதம் இருக்கப்போகுது தி.மு.க.//
சவுக்கடி! நன்றி அனானி நண்பரே.இதை நீங்கள் தனி இடுகையாகவே போடலாம்.
//சென்ற முறை நடந்த சேது சமுத்திர பந்த்(?!?) உண்ணாவிரதப் போராட்டம் போல் பாதியில் முடியாது என்பதால் தொண்டர்கள் வயிறார சாப்பிட்டு விட்டே உண்ணாவிரதப் பந்தலை அடையுமாறு தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.//
அட்ராசக்கை.
Post a Comment