பஞ்ச் டயலாக்குகள் பதினொன்னு!

Posted on Wednesday, July 9, 2008 by நல்லதந்தி

விஜயகாந்த் : உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, பணம் மட்டும் எப்பவுமே வீட்டுக்கு!. ஆங்!




கார்த்திக் : ஹேய்! நா..நா...நான்! . இண்டர் நெட்லீயே மக்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கேன்.இண்டர் நெட்டிலீயே ஓட்டு கேட்டு,இண்டர் நெட்டிலீயே முதலமைச்சர் ஆயிடுவேன்!.



டி.ஆர்.பாலு : கோவிந்தராஜ பெருமாள் சிலைய கடலில கொண்டுபோய் போட்டது.எங்க கம்பனி Boat கள் தான். இதுக்கு ஆதாரம் அய்யன் கலைஞர் கையிலெ இருக்கு.



ரஜினிகாந்த் : ஹே ஹே ஹே..... ஆண்டவன் தசாவதாரத்திற்க்கு ஒரு மாச கலைக்சனை அள்ளி கொடுப்பான்.அப்புறம் கை விட்டுவிடுவான்.ஆனா ரோபோ விற்க்கு சோதனைய நிறைய கொடுப்பான்.ஆனா கை விடமாட்டான்.



கமலஹாசன்: ம்ம்ம்ம்... நான் மைதா மாவு இல்லன்னா சொல்றேன். இருந்து இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொல்றேன்.



கலைஞர் : நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாங்கள் என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது.ஆனா தமிழ் மக்களுக்கு நாமம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுவது மட்டுமல்ல, நம் நெஞ்சும் மகிழ்ச்சியில் முட்டும்.



தயாநிதி மாறன்: இந்தியாவில் உள்ள சேனல் மட்டுமல்ல உலகத்திலுள்ள எல்லா சேனலும் ஒரு ரூபாய்க்கு விரைவில் வழங்கப்படும்..........ஒரு நிமிடத்திற்க்கு ஒரு ரூபாய் மட்டுமே . பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க.



புரட்சித்தலைவி: அம்மா என்றால் அன்பு.அய்யா என்றால் வம்பு.


அஞ்சாநெஞ்சன் அழகிரி: நான் தாயாநிதி மாறனுக்கு மட்டும் கெட்டவனா? இல்ல தம்பிக்கும் சேர்த்தி கெட்டவனா? புரியிலியே.


கவிஞர் கனிமொழி: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்.இதுதாங்க நான் எழுதிய ஒரே கவிதை. மண்டபத்தில எழுதிக் கொடுத்து ,வாங்கிட்டு வந்து படிக்கலைங்க



இளையதிலகம் பிரபு: நான் சும்மா வீட்டில உட்காந்து பல்லு குத்திக்கிட்டிருந்தேங்க. அப்போ தமிழ் மக்கள் ஞாபகம் வந்துடிச்சி.இனிமே வீட்டில உட்காந்து பல்லு குத்தமாட்டேங்க. தமிழ் மக்களுக்காகவே உழைச்சி உயிர் கொடுப்பேங்க. அப்பாவுக்கு விழுந்த ஓட்டில பாதி விழுந்தா கூட போதும் இந்தியாவின் ஜனாதிபதி ஆயிடுவேங்க.

7 Responses to "பஞ்ச் டயலாக்குகள் பதினொன்னு!":

கிரி says:

செம நக்கலு

பிரபு பஞ்ச் டயலாக் தான் அவர மாதிரியே பெருசா இருக்கு :-)))

Anonymous says:

நன்றி கிரி அவர்களே!அதை சுருக்கமுடியலை அவர் உடம்பு போலவே!

வெட்டிப்பயல் says:

//கார்த்திக் : ஹேய்! நா..நா...நான்! . இண்டர் நெட்லீயே மக்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கேன்.இண்டர் நெட்டிலீயே ஓட்டு கேட்டு,இண்டர் நெட்டிலீயே முதலமைச்சர் ஆயிடுவேன்!.//

சூப்பர் :-)

Anonymous says:

நன்றி வெட்டி சார். பதில் தந்தி தெரிவதில் சில சிரமம் இருந்ததால் பதில் நன்றி உடனே தெரிவிக்க முடியவில்லை!.வேற எந்த பஞ்சும் தேறலியா?

SP.VR. SUBBIAH says:

/////அஞ்சாநெஞ்சன் அழகிரி: நான் தாயாநிதி மாறனுக்கு மட்டும் கெட்டவனா? இல்ல தம்பிக்கும் சேர்த்துக் கெட்டவனா? புரியலியே.////

அருமை!

நல்லதந்தி says:

நன்றி வாத்தியார் அவர்களே!. தங்கள் வரவு நல்வரவாகுக!

Anonymous says:

கனிமொழியின் கவிதை சூப்பர்