கொலவெறி! மயிருக்கு யாரால் ஆபத்து?

Posted on Thursday, April 16, 2009 by நல்லதந்தி

தமிழக மழிஞரைப் பேட்டி காண்பது உற்சாகமான அனுபவம். சக பன்னாடை கிட்ட பேசறாப்புல சகஜமா, சல்லீசா பேசலாம், குறுக்கால கேள்வி கேக்கலாம். ஆனா ஓண்ணு அந்த காஜி புடிச்சவர் “நுங்கொம்மால, உங்கோயால, வர்றியா ஒண்ணா சேந்து நாண்டுக்கலாம்” அப்டின்னு கன்னா பின்னான்னு பேசறதை கேக்க காது இல்லாம இருக்கணும்!.

கவிச்சிபுரம் ஊட்டுக்கு நானு காலையில போனப்போ, மழிஞரோட அல்லகைங்க, மழிஞரு அன்னிக்கு பண்ணப்போற அத்தனை கருமாந்தரக் கொடுமைங்களையும் தயாரு பண்ணிட்டிருந்தாங்க. மேல ரூமில ஜனங்களுக்கு எப்பிடி கட்டிங் பண்ணமா மொத்தமா மொட்டையடிக்கலாமுன்னு ஒரு ஐடியா பண்ணி, அதுக்கு தயார் பண்ற பரபரப்பு பயங்கரமா இருந்திச்சி. ஊரில இருக்கிற அத்தினி ஜடாதாரி, கேப்மாரி, மொள்ளமாறிகளும் வந்து அவரைக் கண்டுக்க உக்காந்து இருந்தாங்க.

மழிஞரைப் பொருத்தவரைக்கும் ஜனங்களுக்கு இம்சையும், கொடுமையும் பண்றதுக்காக வெறிபிடிச்சாப்பில விடியக்காத்தாலயே எந்திரிச்சி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாருன்னு அவருக்கு டீ போட்டு குடுக்க வந்தவரு சொல்றாரு.

கை வலிக்க வலிக்க ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதிலதான் இன்பமுன்னு அவரு அடிக்கடி சொல்லுவாராம். அந்த சமயத்தில என்னோட உயிர் போனாக்கூட பிரச்சனைய்யில்லெ, இதுக்காவ உயிரையே கொடுப்பேன்னு சொல்றது, அவரோட ஃபேவரைட் பஞ்ச் டையலாக்.அவரேதான் மொத்த ஜனங்களுக்கும் மொட்டையையும் அடிக்க வேணுங்கறதுக்காக சாமி கிட்ட இந்த மாதிரி அடிக்கடி நேர்ந்துக்குவாராம்.

உள்ளே அல்லகைங்க கிட்ட பேசனதும், நம்பளே அன்போட கூப்பிட்டாரு. அடடா என்ன ஒரு கை வேலை 40 வருஷமா ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதுன்னா சும்மாவா!. அத்தினி நேர்த்தி. இந்தினி வருஷ அனுபவத்தில அவரோட கை அத்தினி பக்குவமாயிருச்சி!. ஒரு இழுப்பு. இந்த ஓரமா இருந்த இலங்கை சைடு பர்னரு காலி!. இந்த இப்ப்டி ஒரு இழுப்பு. அந்த ஓரமா இருந்த காவிரி சைடு பர்னரு காலி!. அதுகப்புறம் மோவாகட்டையில ஒரே ஒரு வீச்சு முல்லைப் பெரியாரிலிருந்து, பாலாறு வரைக்கும் அத்தனை தாடியும் காலி!. அப்புறம் தலைமேல ஒரே ஒரு சீவு தமிழனோட முடியிலிருந்து அடி வரைக்கும் காலி!. ஃபர்பெக்ட் “மழிஞர்” மழிஞர். அத்தினியும் காலி பண்ணப்புறம்தான் அவரு முகத்தில சிரிப்பையே பாக்க முடிஞ்சது!

முடிஞ்சதும் வெளிய வரும் போது ஒரு விஷயம் தெளிவாச்சி! அவரு மழிஞர் அல்ல இளைஞர்.

இத்த முடிச்சி கிட்டு அவரு கிளம்பினது பெருங்கவிச்சிபுரம்!. அவருக்கு அங்கேயும் கடை இருக்கு!. இதைவிட ஒரு விஷயம் அவருக்கு முன்னே ஊருக்கு ஊரு கடை இருந்ததா பல வருஷத்துக்கு முன்ன இருந்த பெருசுங்க பெருமையா பேசுவாங்க!. நமக்கெதுக்கு இப்ப அது!.

பெருங்கவிச்சிபுரத்துக்கு போறதுக்கு மழிஞரை ஒரு நாலுருளியில ஏத்திக்கிட்டு போனாங்க.
போவ சொல்லதான் நாலு வார்த்தை பேச முடிஞ்சது.

நல்லாயிருக்கீங்களான்னு நானு கேட்டு வாய மூடல. ஒரே அழுவாச்சி!. எங்கப்பா நல்லாயிருக்கிறது. தீவுக்குப்பத்தில இருக்கிறவங்களுக்கு முன்னெயெல்லாம் நான் மொட்டை அடிச்சிகிட்டுஇருந்தேன். இப்போ ஆளுக்க்கு ஆள் புதுசு புதுசா கிளம்பி அத்தினி பேரும் அவங்களுக்கு மொட்டையடிக்க கிளம்பிட்டாங்க. நீயே சொல்லு பாப்பம்மாவிலிருந்தது, தாசப்பா வரைக்கும் அவங்க தொல்லை தாங்க முடியிலப்பா.
அவங்களுக்கு நான் 1956 லிருந்தே காதுகுத்தி மொட்டையடிக்கிற வேலை நாந்தான் செஞ்சிகிட்டு இருந்தேன்.நன்றி கெட்டவங்க, எக்கேடோ கெட்டு போகட்டும்,அப்படின்னு நான் ஊட்டுல பேசிகிட்டு இருந்ததை எவனோ போட்டுக் கொடுத்துட்டான் போலிருக்கு. அது எல்லாம் உண்மையில்லைபா!. நான் அவங்களை மட்டுமா சொன்னேன் நான் மொட்டை அடிச்ச அத்தினி பேரையுந்தாம்பா சொன்னேன்.

எப்பயுமே வழிச்சிக்கிட்டே இருக்கிறது சிரமமா இல்லையான்னு நானு கேட்டதுக்கு, வாயெல்லாம் ஒரே சிரிப்பா சொன்னாரு. எனக்கென்னப்பா சிரமம்!. எங்கிட்ட மாட்டினவங்களுக்குத்தானே அத்தனை சிரமமும்!.

அதுக்கப்பறம் பேட்டியோட டைட்டில் கேள்விய கேட்கலாமுன்னு கொலவெறி மயிருக்கு எதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே அப்படின்னேன். அவரு கமுக்கமா அடுத்த வாரம் வர்ற்றீயா இதுக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்.உடனே நான் அடுத்த வாரம் எங்க வர்றது அதான் வந்து உட்காந்தவுடனே மொட்டையடிச்சிட்டீங்க. அப்புறம் எதுக்கு அடுத்தவாரம் வர்றது இப்பயே சொல்லித்தொலைங்கன்னேன்.

அப்புறம், அவரு சொன்னாரு அவரு மவன் கொலவெறி கடையில பூட்டு காணாம போயிடுச்சாம்!. அதனால கதவை வெறுமனே சாத்திக்கிட்டு மவங்காரரு வீட்டு வந்துட்டாராம் காலையில கடையத் திறந்தா கூடையில கொட்டி வெச்சிருந்த மயித்தை காணோம். நேத்தைக்கும் இந்தமாதிரியே திரும்பவும் ஆயிடுச்சாம். அதான் அதை யாரு எடுத்திருப்பாங்கன்னு யோசனை பண்ணிகிட்டு இருக்கேன், அப்படீன்னாரு.

த்தூன்னு துப்பிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இப்போ அதையேத்தானே நீங்களும் செஞ்சிகிட்டு இருக்கீங்க!.

பி.கு: இந்த வாரக் குமுதம் நான் இன்னமும் படிக்கலை

10 Responses to "கொலவெறி! மயிருக்கு யாரால் ஆபத்து?":

Anonymous says:

:))

Krish says:

Thanthi at his (her!) best.

kalignar says:

குமுதம் , ஆனந்த விகடன் போன்றவைகளை காசு கொடுத்து வாங்குவது போன்ற முட்டாள் தனத்திற்கு இணை கிடையாது என்பது எனது கருத்து !

வால்பையன் says:

//அவரேதான் மொத்த ஜனங்களுக்கும் மொட்டையையும் அடிக்க வேணுங்கறதுக்காக சாமி கிட்ட இந்த மாதிரி அடிக்கடி நேர்ந்துக்குவாராம்.//

அப்பப்ப சாமிக்கும் மொட்டையடிப்பாரே!
அத விட்டுடிங்க!

வால்பையன் says:

குமுதம் வாங்க வச்சிடிங்களே!

மாசிலா says:

நல்ல தமாஷ். நன்றி.

Shrek says:

Excellent post... liked every bit of it. rhyming words yet attribute the personality and character of the concerned

:))))))

நல்லதந்தி says:

ரொம்ப நன்றி krish!.
வாங்க கலைஞர் உண்மையச் சொன்னீங்க ரெண்டு பத்திரிக்கைகளும் தண்டம்தான்!.

வால்!. பிறந்தநாள் வாழ்த்துகள்!. நாங்களேல்லாம் குமுத்தை வாங்கி பட்ட கஷ்டத்தை நீங்களும் ஒரு தடவை அனுபவிங்க!.

நன்றி மாசிலா!

நன்றி sherk!

Anonymous says:

:)

Anonymous says:

மழிஞர். சரியான பட்டம்.