”உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்காக அயல் நாடுகளுக்கு நாங்கள் புறப்பட்ட நேரத்தில் எங்களுக்கு அது என்ன கதை.. நமக்கென்ன பாத்திரம் என்று எதுவும் தெரியாது. எம்ஜிஆர் விளக்கமாக கதையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் ஏதும் சொல்லவில்லை.
நமெக்கேன் கவலை அவர் சொல்கிறபடி நடித்துக் கொடுப்போம் என்று எண்ணிக் கொண்டு என் குழுவினரோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தேன்,
ஜப்பான் நாட்டை அடைந்ததும் நாகேஷ் இன்னின்ன காட்சிகளை இப்படி இப்படி படமாக்கிக் கொள்ளுங்கள் என பூரண சுதந்திரம் கொடுத்தார்.காமிராமேனுடன் என் சம்பந்தப்பட்ட தனிக் காட்சிகளை இஷ்டப்படி படமாக்கினேன். முக்கியமாக நாங்கள் கருதிய இடங்களில் படமெடுத்த பிறகு அந்த விவரத்தை எம்ஜிஆரிடம் கூறிவிடுவேன்.
எம்ஜிஆர்,தன் சம்பந்தப் பட்ட காட்சிகளையும்,பாடல் காட்சிகளையும் படமாக்கினார். ஒரு பாடல் காட்சியில் தாடியுடனும், மற்றொரு படல் காட்சியில் தாடியில்லாமலும் நடித்துப் படமாக்கினார்.எனக்கு அது புரியவில்லை....என்ன சார் மாறுவேட ‘காதல் பாட்டா’ என்றேன்.அவர் சிரித்துக் கொண்டாரே தவிர விளக்கம் தரவில்லை.
மாலையில் படப்பிடிப்பு முடிந்ததும் அப்பாடி என்று ஹோட்டலுக்கு திரும்புவோம். அறைக்குள் வந்ததும் முதல் காரியமாக அயல் நாட்டு விஸ்கி பாட்டிலை எடுத்துக் கொண்டு விடுவேன். அப்புறமென்ன ஒரே குடிதான் ..தமாஷ்தான் (எம்ஜிஆருக்குத் இது தெரியாதபடி நடந்து கொள்வோம்!)
நாங்கள் இப்படி தமாஷாக் கூத்தடிப்போம், ஆனால் எம்ஜிஆர் ஹோட்டலில் தங்காமல் ஊரைச்சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிடுவார்.. தீடீரென்று இரவு பத்து மணீக்கு வருவார்... புறப்படுங்கள் ஒரு அருமையான லொகேஷனைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன்..அங்கு படமெடுக்க வேண்டும் என்று துரிதப் படுத்துவார்...
விஸ்கி வாடையை பாடுபட்டு மறைத்து விட்டு படப்பிடிப்புக்கு புறப்படுவோம். தெருக்களில் எங்களைக் கண்டபடி சுற்ற்ச் சொல்லி படம் எடுப்பார். எதற்கென்று எங்களுக்குப் புரியாது.வில்லன் தேடுகிறான் அவனிடமிருந்து தப்பிக்க ஓடு என்பார் சந்திரகலாவிடம். அவர் அப்ப்டி மறைந்து மறைந்து வீதிகளில் செல்வதை படமாக்குவார்.
என்ன கதை,இங்கு ஏன் வில்லன் வந்தான், கதாநாயகியை ஏன் துரத்துகிறான், அவளிடம் உள்ள இரகசியம் என்ன....எதுவும் எங்களுக்குத் புரியாது. ‘ஏன் சார் உங்களுக்கு இரட்டை வேடமா? என்று ஒரு நாள் கேட்டேன்....அதற்கும் சிரிப்புதான் பதில்.
பிறகு....................
2 Responses to "உலகம் சுற்றும் வாலிபனும் நாகேஷும்!":
உலகம் சுற்றும் வாலிபனில் ஒரு காட்சி, கூர்ந்து பார்த்தால் புலப்படும். ஓரிடத்தில் தானியங்கி walkway ஒன்றின் மீது ஒரு பக்கமாக பார்த்தபடி எம்ஜிஆர் செல்ல, தூரத்தில் மறுபக்கத்திலிருந்து நாகேஷ் அவரைக் கூப்பிடுவார். நடுவில் கண்ணாடிச்சுவர் இருந்ததால் எம்ஜிஆருக்கு இது காது கேட்காது கதைப்படி.
ஆனால் அந்தோ, ஒரு ஜப்பானியர் (படப்பிடிப்புக்கு சம்பந்தமில்லாதவர்) எம்ஜிஆரை தட்டி அவர் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்வார். எம்ஜிஆரா கொக்கா, மனிதர் அசையவே மாட்டாரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு சார்!.நான் அந்தக் காட்சியை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதும் ஆவலோடு கவனிப்பேன். ஜப்பானியர் தட்டி நாகேஷைச்சுட்டிக் காட்டுவதை எம்.ஜி.ஆர் ஒரு முறையாவது கவனிப்பாரா என்று! :)
Post a Comment