இது பழைய விஷயம் தான், இருந்தாலும் இப்போ தீடீரென்னு நினைவுக்கு வந்தது. ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு நன்மை இந்த இரட்டை இலையால் இருக்கான்னு நான் வியக்கிறேன்., பெரிய விஷயத்துக்கு ஜனங்களுக்கு எவ்வளவு உபயோகமாய் இருக்குமோ!.
இரட்டை இலையால் விளையும் நன்மை!
10 comments Filed Under: அரசியல், அனுபவம், பாராளுமன்றத்தேர்தல்
கலைஞருக்கு சில TIPS!
வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!. இரண்டு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஆஸ்பத்திரி உண்ணாவிரதம் அறிவித்தார். இதனால் நமக்குத் தெரியாமல் ஆஸ்பத்திரியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்று அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் ஆப்பரேஷன் முடிந்த கையோடு நீங்கள் இப்படி அறிவித்தால் மக்கள் நீங்கள் உண்மையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐகோர்ட் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆஸ்பத்திரி டிராமாவை நடத்துகிறாரா? என்று மக்கள் சந்தேகப் படமாட்டார்களா என்று சொன்னவுடன் தன்னுடைய தில்லுமுல்லு தனக்கே ஆப்பு வைப்பதைக் கண்டு உண்ணாவிரத தமாஷை அப்படியே அடக்கி வாசித்து வீடு திரும்பினார். இப்படி காரிய முட்டாளான கலைஞர் டாக்டர்களைக் காரணமில்லாமல் முட்டாள்கள் ஆக்கினார்.
இப்போதைய வாக்கிங் உண்ணாவிரதம் லஞ்ச் பிரேக்குக்கு முன்னால் பிரேக் ஆகிவிட்டது. உண்ணாவிரதத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டாரே ஒழிய இன்னும் அம்மா முதல் ஐ.நா.சபை செயலாளர் வரை போர் நிறுத்தத்திற்காக இந்த நிமிடம் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைக் கேட்டால் ஒருத்தருக்கு எவ்வளவுதான் தொல்லை கொடுப்பது விட்டு விடுங்கள். ஆஸ்பத்திரியில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்பார். மக்கள் நம்புவதாய்த் தெரியவில்லை. வேறு என்ன செய்வது என்றால் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இராஜபக்ஷே போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாய் தெரியவில்லை.அவ்ரை ஒப்புக் கொள்ள வைக்க கலைஞர் வீட்டில் அவருக்கு பலமான விருந்து வைத்து அவர் சாப்பிட முடியாமல் ”போதும் நிறுத்துங்கள்” என்று சொல்லும் போது கொல்றாங்களே டப்பிங் வாய்ஸ் புகழ் தயாநிதி மாறனை விட்டு “போரை நிறுத்துங்கள்” என்று மாற்றிக் குரல் கொடுத்து சன்,கலைஞர் T.V யில் ஒளிபரப்பலாம்.
இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. வழக்கம் போல், மனித சங்கிலி, தந்தி, உண்ணாவிரதம், பந்த் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவே இலங்கைப் பிரச்சனையை அணுகலாம் என்றால்....
விடுமுறைக் கொண்டாட்ட உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதத்தில் உள்ள விஷேசம் என்னவென்றால் உண்ணாவிரதத்தை நாம் இருக்க வேண்டியது இல்லை. கலைஞர் T.V, Sun T.V போன்றவைகளில் இதுவரை தமிழ் படங்களில் இடம் பெற்ற உண்ணவிரதக் காட்சிகளை ஒன்றினைத்து ஒளி பரப்பலாம். நாமெல்லாம் T.V.யைப் பார்த்து, சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதக் காட்சிகளைப் பார்ப்பதனால் உண்ணாவிரதம் இருக்கின்ற உணர்வைப் பெறலாம். பெரும்பான்மையான படங்களில் வரும் உண்ணாவிரதக்காட்சிகள் நகைச்சுவை காட்சியாகவே அமைக்கப் பட்டு இருக்கும். எனவே கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அளவிற்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், ஒரளவிற்கு நகைச்சுவையாகவே இருக்கும் படியால் கொண்டாடத்திற்கு குறைவு இருக்காது.
தந்தி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் புதுமை கலந்தது. தந்திக்குத் தந்தி! உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம்.சுருக்கமாகச் சொல்லப் போனால் மாறன் பிரதர்ஸ் அழகிரி பிரச்சனையையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையையும் பணம் என்கிற ஒரே கல்லில் கலைஞர் தீர்த்ததைப் போல!. இதில் இன்னொரு புதுமையும் உண்டு இந்தத் தந்தியை நீங்கள் பிரதமருக்கு அனுப்பத் தேவையில்லை. அவர் சாதாரணமாகவே இதை கவனிக்கப் போவதில்லை, அதிலும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவருக்கு தந்தி வந்த விஷயமே தெரியாமல் போய் விடலாம். எனவே இந்தத் தந்தியை நம் விலாசத்திற்கே அனுப்பிக் கொள்ளலாம். இதனால் டெல்லி வரை தந்தி அனுப்புகின்ற செலவு மிச்சம். தந்தியில் உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று வாசகம் அனுப்புவதில் அதை நமக்கே அனுப்பிக் கொள்வதால் சுருக்கமாக உ.கொ.உ.இ என்று அனுப்பிக் கொள்ளலாம். தந்தி வீட்டிற்கு வந்தவுடன் தந்தியை உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று ஆவேசமாக படித்து ஆறுதல் அடைந்து இலங்கைப் பிரச்சனையை யாரும் அறியாமல் தீர்க்கலாம்.
மனிதசங்கிலி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் கூடி வாழ்ந்தால் கேடிகளுக்கு நன்மை என்ற திட்டத்தில் பால் வகுக்கப் பட்டது. இதில் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் ஜனக்களுக்கு தரிசனம் தரும் போது எந்தத் தலைவனும் வேறு அணிக்குத் தாவக்கூடாது என்று தடுப்பதைப் போல ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். அதைப் போல தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தத்தமது ஒரு கையால் பிடித்திக் கொள்ளவேண்டும் மறு கையால் மற்றவருக்கு அவருக்கு வேண்டுமானவற்றை ஊட்டிக் கொள்ளலாம். உண்ணாவிரதக் கொள்கைப் படி அவர்கையால் அவர் சாப்பிடக்கூடாது. போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மாடு போல அசை போட்டுக் கொண்டிருக்காமல் இருக்க கொஞ்சம் கவனம் தேவை.
ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: இது கொஞ்சம் old style உண்ணாவிரதம். வழக்கமாக தொழிற்ச்சங்கங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொள்ளும் பாணியிலான உண்ணாவிரதம் இது. காலை 6 மணிக்கு 100 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் சரியாக 8 மணிக்கு மேலும் 10 நண்பர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வர வேண்டும். இவர்கள் வந்தவுடன் உட்கார்ந்து இருக்கும் 10 பேர் வெளியே எழுந்து போய் தத்தமது கடமையை ஆற்றிக் கொண்டு வரலாம். இவர்கள் வந்த்தவுடன் அடுத்த 10 பேர் வெளியே சென்று காலை போஜனத்தை முடித்துக் கொண்டு வரலாம். இப்படியே ஒரு சுற்று முடிவதற்குள் மதிய சாப்பாட்டு வேளை வந்துவிடும். அடுத்த சுழற்சியை இப்படியே தொடரலாம். ஒருத்தர் கூட சாக முடியாது. இம்மாதிரி ஆயிரம் வருடங்கள் கூட உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.
மிட் நைட் உண்ணாவிரதம்: இது முழுக்க முழுக்க கலைஞர் பாணியிலான உண்ணாவிரதம். எல்லா மனிதர்களும் தான் ஒரு சாப்பாட்டு வேளைக்கு மறு சாப்பாட்டு வேளைக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் இம்மாதிரி உண்ணாவிரதம் இருந்ததினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல் வேறு யாராவது இருந்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா?. கலைஞர் முதல் நாள் கூட இப்படித்தான் சாப்பிட்டு இருப்பார். ஆனால் இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது. அதே போல் இரவு சாப்பாட்டுக்குப் பின் காலை வரைக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் இது மிட் நைட் உண்ணாவிரதம். இந்த உண்ணாவிரதத்தில் தூங்குபவர்கள் தூங்கலாம். ஆனால் உட்கார்ந்தபடி தான் தூங்க வேண்டும் இழுத்துப் போர்த்திக் கொள்ள போர்வை தரப்பட மாட்டாது. Sun T.V. யில் சூர்யா T.V. யில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவையும், கலைஞர் T.V. யில் மானாட மயிலாடவையும் ஒளிபரப்பலாம்.
33 comments Filed Under: அரசியல், அனுபவம், கலைஞர், மொக்கை