இலங்கைப் பிரச்சனையில் பல்வேறு சடங்குகள் இதுவரையிலும் நடத்தப் பட்டாலும்.,அது எப்பொதுமே கலைஞர் கையால் நடத்தப்படும் சடங்காகுமா?. அவர் இந்த மாதிரி சடங்குகளை நடத்துவதில் ஈடு இணையற்ற புரோகிதர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
ஏற்கனவே அவர் சட்டசபையில் நடத்திய “இறுதி வேண்டுகோள்” சடங்கின் ஈரம்
இன்னும் காயாமல் இருக்கும் போதே மீண்டும் ஒரு வழமையான சங்கிலிச் சடங்கை தமது குடும்பத்தாரால் நடத்தியுள்ளார் ...சாரி ,.....கழகத்தாரால் நடத்தியுள்ளார்.
அய்யோ! அய்யய்யோ!. இலங்கைத் தமிழர்களின் மீது அவ்வளவு அன்பா? என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். ஒரு வேளை அந்த அளவிற்க்கு அப்புராணி தமிழனாக இருந்தால் கவலைப் பட வேண்டாம்.அதெல்லாம் ஒன்றுமில்லை .
தமிழினத் தலைவர் என்றப் பட்டத்தால் வருகிற வழக்கமான ஜன்னி தான் பய்ப்
பட ஒன்று மில்லை, என்று குடும்ப டாக்டர்கள் ஆறுதல் தருகிறார்கள்!.இந்த படத்தில் உள்ள வருங்கால முதல்வர், மற்றொரு வருங்கால முதல்வர்,இன்னுமொரு வருங்கால முதல்வர் இவர்கள் “நான் கடவுள்” படத்துக்கு டிக்கெட் வாங்க நிற்க வில்லை!.
ஏதோ சங்கிலியாம் சிவாஜி நடித்தப் படமல்ல!. மீண்டும் ..மீண்டும் சங்கிலியாம்...அதனால் இது கழகம் சம்பந்தப் பட்ட வழக்கம் போல் ஒரு இலங்ககைத் தமிழர்களுக்கான மனிதசங்கிலிதான்!.
இந்தச் சிரித்த முகங்களைப் பார்த்தால், இன்னும் இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதாய்த் தெரியவில்லை!. இதையும் மீறி அவர்கள் துன்பப் பட்டால் அதற்க்கு கழகம் பொறுப்பாக முடியுமா?.
பி.கு: கழகத்தின் போராட்டங்கள் எப்போதுமே ஒரு வழக்கமாகச் சுற்றி வரும் வட்டம் என்பதால், இதற்க்குப் பிறகு வரும் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக இருந்து இருக்கக் கூடும். ஆனால் திருமா வளவன் போன்ற கழக அல்லக்கைகள் அதை நடத்தி ஒரு மாதம் மட்டுமே ஆனதால் அதை அடுத்த்ப் போராட்டமாக வைத்துக் கொள்ளக் கூடும். அதனால் அடுத்த கழகப் போராட்டம் “தமிழர் தந்தி” போராட்டமாக இருக்கக் கூடும். எனவே தமிழர்கள் இன்று சரக்கடித்தது போக மிச்சக் காசை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். நாளைக் காலை மத்திய அரசுக்கு தந்தி கொடுக்க உபயோகப் படும்!.
8 Responses to "இறுதிச் சங்கிலி!. உபயம் கலைஞர்.மு.க.!":
//இந்தச் சிரித்த முகங்களைப் பார்த்தால், இன்னும் இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதாய்த் தெரியவில்லை!. இதையும் மீறி அவர்கள் துன்பப் பட்டால் அதற்க்கு கழகம் பொறுப்பாக முடியுமா?//
:-)))))))
நிகழ்காலம் படுத்துடுட்டு இருக்கிறது
எதிர்காலம் (நின்னுக்கிட்டு) காத்திட்டுருக்கிறது
// தமிழர்கள் இன்று சரக்கடித்தது போக மிச்சக் காசை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். நாளைக் காலை மத்திய அரசுக்கு தந்தி கொடுக்க உபயோகப் படும்//
Super! ;)
உண்மையை இப்படி பப்ளிக்குல போட்டு உடைச்சுட்டீங்க ?
Welcome Back Thanthi!
நன்றி!.டன்மானடமிழன்! நாங்களும் ஓட்டுப் போட காத்துக்கிட்டு இருக்கோம்ல!
வாங்க பாஸு! இது ஊருக்கெல்லாம் தெரிஞ்ச உண்மைதானே!
வாங்க! க்ருஷ்!.வந்துட்டோம்ல!
ஊருக்கே தெரிஞ்சு இருந்தாலும் தமிழ்மணத்தில் எழுதும் பகுத்தறிவாளர்கள் இதைப்பற்றி வாயையே திறக்க மாட்டேங்கிறாங்களே !
என்னங்க பாஸ் இப்படிச் சொல்லிட்டீங்க.பகுத்தறிவாளர்கள் தேவையானதை மட்டும் பகுத்துதானே எழுதுவார்கள். :)
என்னாங்க தல,சைட்டை சூப்பரா பண்ணிட்டிங்க போலிருக்கு. :)
Post a Comment