துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!

Posted on Sunday, March 15, 2009 by நல்லதந்தி



இந்த வாரம் ஜெயா டிவியில் திரும்பிப்பார்க்கிறேன் என்கின்ற நிகழ்ச்சியில் “சோ” வின் மலரும் நினைவுகளைக் காட்டினார்கள்.
திங்கள் முதல் வெள்ளி வரை என்றாலும் அந்த நிகழ்ச்சி நிமிடத்தில் முடிந்தது போல் ஒரு உணர்வு. சோவின் நகைச்சுவை உணர்வும், தைரியமும்,  நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், அதை அவர் வாயாலேயே சில சம்பவங்களைச் சொல்லக் கேட்கும் போது நமக்கு எற்பட்ட மகிழ்ச்சியே தனிதான்!.

காமராஜருடன் அவருக்கு ஏற்பட்ட மோதலை அவர் விவரித்தார். அவருடைய நாடகத்திற்கு அரசு அனுமதி தராத சூழ்நிலையையும் (அப்போதெல்லாம் போலீஸ்தான் அனுமதி தர வேண்டுமாம்), பிறகு அவர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அரசு வழக்கறிஞர் போன்றவர்களே அரசு பக்கம் நியாயம் இல்லை. அதனால் சோ பக்கம்தான் தீர்ப்பு ஆகும் எனவே, அவ்ருடைய நாடகத்திற்கு அனுமதி தந்துவிடுவதுதான் உத்தமம், என்று கூற, பிறகு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ...அப்போது நிச்சயமாக தமிழகத்தில் காங்கிரஸ் அரசுதான் இருந்து இருக்கும். ஆனால் முதல்வர் காமராஜரா..பக்தவச்சலமா.. தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த சமயம் சோ புகழ் பெறுவதற்கு முந்தைய காலமென்றால் (அதாவது திரைப் படங்களில் ,..நாடகத்தைப் பொறுத்தவரை அவர் அப்போதே புகழ் பெற்றுதான் இருந்தார்)நிச்சயமாக அப்போதைய முதல்வர் காமராஜராகத் தான் இருக்க வேண்டும்.

அன்றைய நாடகத்திற்கு சிறப்புவிருந்தாளி திரு. காமராஜர். அருகில் வந்தமர்ந்த சோ வும் காமராஜரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வில்லை, ஆனால் சோ போராடிபெற்று இருக்கிறார் என்று அப்போது பேசிக்கொண்டிருந்த திரு.ஜெமினி கணேசன் சொன்ன போது காமராஜர் சோ விடம் கேட்கிறார், இதுநிஜமா? என்று சோவும் ஆமாமென ஆமோதிக்க ஆரம்பிக்கிறது பிரச்சனை.

காமராஜர் சோவிடம் நீ அதிகப் பிரசங்கித்தனமாக எதோ எழுதியிருப்பாய் அதனால்தான் அதிகாரிகள் அனுமதிவழங்க மறுத்திருப்பார்கள் என்று சொன்னார். நான் இந்த நாடகத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை, அப்படியிருக்க எதனால் அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்று கேட்க,இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் காமராஜர் சோ விடம் கோபித்துக் கொள்ள, அந்த நிறைந்த அரங்கத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காமராஜர் அரங்கை விட்டு எழுந்து போய்விட்டார்.

மறுநாளில் இருந்து சோவிற்கு அலுவலகத்திலும்,அவருடைய வீட்டிலும் பல பிரச்சனைகள். (இன்றைய முதல்வர் ஏற்படுத்துவது போல் அல்ல! :)காமராஜருக்கும் அந்தப் பிரச்ச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) ஆனாலும் தான்செய்த்தது சரியே என்ற நிலையிலேயே சோ நின்றார். அந்த அளவிற்கு மாபெரும் ஆண்மையாளர் திரு.சோ. விஷயம் என்ன ஆனது என்கிறீர்களா!. இந்தப் பிரச்சனையில் திரு.காமராஜரே தலையிட்டு சோ வின் மீது குற்றமில்லை என்று சொன்ன பிறகு தீர்ந்தது.

இன்னொரு சம்பவம் இயக்குனர் திரு.நீலகண்டன் ஒரு முறை சோவிடம் உன்னுடைய பத்திரிக்கை எப்படி போகிறது என்று கேட்க, சோவும் நல்லமுறையில் போகிறது என்றுசொன்னார். கலைமகள் பத்திரிக்கை எப்படிப்போகின்றதென அவர் கேட்க சோவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார். அடுத்து மஞ்சரி எப்படிப் போகிறதென்று அவர் கேட்கசோவும் அதுவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார்.

அத்தோடு நீலகண்டனுடைய வாய் சும்மாஇருந்து இருக்கலாம்.  வாயைக் கொடுத்து வேறெதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல, துக்ளக் போன்ற பத்திரிக்கையெல்லாம் நன்றாகப்போகின்றன. ஆனால் கலைமகள் போன்ற நல்லப் பத்திரிக்கையெல்லாம் சரியாகப் போவதில்லைப் போலிருக்கிறது என்றார்.

அப்போது, திரு.எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போதே சோ சொன்னது பல நல்லப் படங்கள் எல்லாம் ஓடாமல் போகும் போது “என் அண்ணன்” எப்படி ஓடுகிறதோ அதைப் போலத்தான். எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போது இப்படி சொல்ல என்ன’தில்’ வேண்டும். சோ இப்படிச் சொன்னவுடன் என்.ஜி.ஆரே சிரித்து விட்டு நீலகண்டனிடம், இவரிடம் வாயைக் கொடுத்து உங்களால் மீளமுடியுமா? என்றுக் கேட்டாராம்.

இதையெல்லாம் எதுக்கு சொல்றே அப்படின்னு கேட்கறீங்களா?. சமீபத்தில் ஆண்மையைப் பற்றி ஒரு பேச்சு வந்த போது இது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.
திமுக தலைவர்களைப் போல் ஒண்ணுக்கு மூணு கட்டுறதுதான்...மன்னிக்க .. சேர்த்துகிறது ஆண்மையோ என்னவோ தெரியிலையே. அல்லது உயிரைக் கொடுப்பேன் அப்படின்னு சொல்லறதுதான் ஆண்மையோன்னு தெரியிலை (அம்மா! கொல்றாங்களே இதிலெ சேர்த்தியில்லை! :) )

1975-ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த போது கூட வாய் திற்க்கப் பயப்பட்டவர்கள்,ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ என்று பயப்பட்டவர்கள்.இத்தனைக்கும் அன்றைய திமுக அரசுமுடிய ஒரிரு மாதங்களே இருந்த நிலையில், (ஒரு நாள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாதில்ல)  ஆட்சியை கலைத்தவுடன் மிசா,கிசா என்று பட்டம் போட்டு புலம்பிய ஆண்மையாளர்களுக்கு மத்தியில் நெருக்கடி நிலையை எதிர்த்த (குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் இதை ஆதரித்துத்தான் பிழைப்பை ஓட்டின) ஆண்மையில்லாத சோ போன்றவர்கள் நாட்டுக்குத் தேவை.

எதாவது பொழுது போகாத பெருசைக் கேட்டுப் பாருங்க. சும்மா இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு உசிரை விட்ருலாங்க, அப்படிம்பார் அந்த மாதிரி சும்மா பெனாத்துரதுதான் ஆண்மையின்னா..... (கலைஞருன்னா உயிரை நமக்காகத் தருவதாகச் சொல்வார், அதை வெச்சிக்கிட்டு என்னாங்க பண்றது! :) ) .........என்னத்த சொல்றதுங்க!.

(துக்ளக்கில் சிட்டுக்குருவி லேகிய விளம்பரங்கள் வருவதற்குக் காரணம் ஒரு வேளை திமுகவினர் விடாமல் படிப்பதால் இருக்குமோ? :)

பி.கு.: இது எதிர் பதிவல்ல! 

31 Responses to "துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!":

Anonymous says:

:)

Krish says:

ரொம்ப நாள் அப்பறம் திரும்பி வரீங்க! வாழ்த்துக்கள்.
இப்போ கூட கலைனர் வீடு கலியாணத்துக்கு போய் அழகிரியை கலாசிய செய்தியை விகடனில் பார்த்தேன்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

வாங்க தந்தி !
நாட்டில் எது நடந்தாலும் கலைனருக்கு ஜால்ரா தட்டும் இணையத்தில் ஆண்மையாக கருத்துக்களை வைப்பதில் நீங்களும் ஒரு ஆள் !

Anonymous says:

nalla pathivu. Sila netril mulaithavargal vaai savadaluku nalla pathil. Mikka magizhchi

Raju says:

\\பி.கு.: இது எதிர் பதிவல்ல! \\

நல்லாத்தான போயிக்கிட்டுருந்துச்சு...

Anonymous says:

நச் பதிவு இதுக்கும் மேல பதிவுல நொல்ல தந்தி, அல்ல தந்தி அப்படிங்கிற பெயரில் அனானிங்க கமெண்டா இருக்க போவுது

Anonymous says:

ஏன்னா அவங்க பெரிய ஆம்பளைங்களாச்சே

வால்பையன் says:

நான் நினைச்சு எழுத வேண்டாம்னு விடுறதையெல்லாம் நீங்க பதிவா போட்டு விடுறிங்க!
வால்பையன் தான் வக்கத்து போய் நல்லதந்திங்கிற பெயர்ல எழுதுறான்னு எல்லோரும் கொடாயட்டும்.

நல்லதந்தி says:

//வால்பையன் தான் வக்கத்து போய் நல்லதந்திங்கிற பெயர்ல எழுதுறான்னு எல்லோரும் கொடாயட்டும்.//
வாங்க வால்!.இதுக்கு உடனே பதில் போட்டுடுறேன் அப்பத்தான் இன்னும் கொஞ்சம் அதிமா கொழம்புவாங்க! (அது சரி நல்லதந்திக்கு வால் பையன் அளவிற்கு அறிவு இருக்கான்னு யோசனை பண்ண மாட்டாங்களா! :))

நல்லதந்தி says:

வாங்க கிருஷ்! நல்லா இருக்கீங்களா, நீங்கல்லாம் இருக்கச் சொல்ல என் பொழைப்பும் கொஞ்சம் ஓடுது.

நல்லதந்தி says:

//நாட்டில் எது நடந்தாலும் கலைனருக்கு ஜால்ரா தட்டும் இணையத்தில் ஆண்மையாக கருத்துக்களை வைப்பதில் நீங்களும் ஒரு ஆள் !//

வாங்க பாஸூ ஒரெடியாய் சாச்சுபுட்டீங்களே பாஸ்! :)

நல்லதந்தி says:

டக்ளஸ் உங்க பஞ்ச் டையலாக்கை படிச்சி ஓரே சிரிப்புதான் போங்க. :))

Anonymous says:

தமிழ்மணத்துல இந்த குப்பைப் பதிவ எல்லாம் ப்ளாக் பண்ண மாட்டாங்களா?

நல்லதந்தி says:

//so said...
தமிழ்மணத்துல இந்த குப்பைப் பதிவ எல்லாம் ப்ளாக் பண்ண மாட்டாங்களா?//
உங்களுடைய ”போங்கு”க்கு என் நன்றி!

Anonymous says:

நண்பரே.. சோவை யார் எதிர்க்கப் போகிறார்கள்... அவர்தான் சகல வசதிவாய்ய்புகள் இருக்கிறவர் ஆயிற்றே... புரியும்படி சொல்கிறேன்... குண்டர்களால் துறத்தப் பட அவர் என்ன பாட்டாளிகள் தலைவரா..? அரசு இயந்திரத்தால் பேச்சுரிமைக்காக நசுக்கப் பட அவர் என்ன இடது சாரியா...? அவர் பல தொழிலதிபர்களின் நண்பர் (அவரே சொல்லியிருக்கிறார்).. இந்திய அரசு...அதாவது அரசு என்று இங்கே குறிப்பிடுவது தோழர் லெனின் என்ன பாசையில் சொன்னாரோ.. அந்த அர்த்தத்தில் சொல்கிறேன்.. ஆக, அரசு இயந்திரங்களின் ஆத்மார்த்த நண்பர்.. அரசு உயர் echelonல் உள்ளவர்கள், சாதி அடுக்கில் உள்ள உயர் வகுப்பினர் ஆகியோர் கூட்டத்தைச் சேர்ந்தவர்.. அவ்வவ்பொழுது ஆலோசனைகள் கூட சொல்லக்கூடும்.. யார் கண்டார்கள்.. ஆக அவர் ஒரு சிறந்த ஆளும் வர்க்கப் பிரதிநிதி.. அவரைப் பற்றிய பயம் உங்களுக்குத் தேவையில்லை...
கந்தசாமி

Anonymous says:

//அரசு உயர் echelonல் உள்ளவர்கள், சாதி அடுக்கில் உள்ள உயர் வகுப்பினர் ஆகியோர் கூட்டத்தைச் சேர்ந்தவர்..//

இதுல எங்க இருந்துயா வந்தது உங்க ஜாதி? அம்மனமா இருக்குற ஊர்ல கோவணம் கட்டுனவன் தான் கேனயாம்... அது மாதிரி மரமண்டைகளா இருக்குற ஊர்ல சோ மாதிரி ஆளுங்கல இப்படி தான் உங்களால அசிங்க படுத்த முடியுமே தவிர, அவர் திறமையை யாராலும் குறை சொல்ல முடியாது...
கண்ண தொறங்க பாஸு, உலகம் இருட்டாம தான் இருக்கு...

அறிவிலி says:

"இது எதிர் பதிவல்ல" என்று கூறினாலும், எது உங்களை தூண்டியது என்பது பலருக்கும் புரிந்திருக்கும்.

பண்பான முறையில் எழுதியிருக்கிறீர்கள்.ஒருவேளை பின்னூட்டம் படிக்கவில்லையோ?

உங்கள் அளவுக்கு புள்ளிவிவரங்கள் கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், உடனடியாக ஏற்பட்ட ரத்த கொதிப்பின் விளைவாகவும் கொஞ்சம் தடாலடியாக பதிவெழுதிவிட்டேன்.

நல்லதந்தி says:

//இதுல எங்க இருந்துயா வந்தது உங்க ஜாதி? அம்மனமா இருக்குற ஊர்ல கோவணம் கட்டுனவன் தான் கேனயாம்..//
வாங்க இராமு! படிக்காதவர்களிடம் கூட ஜாதிவெறியும், துவேசமும் மறைந்து கொண்டிருக்கிறது.மெத்த படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் புழங்கும் இணையத்திலோ ஜாதிவெறியும், ஜாதித் துவேசமும் தலைவிரித்தாடுகிறது. ம்ம்ம்ம்ம்ம்.... என்னத்தைச் சொல்ல!

நல்லதந்தி says:

//உங்கள் அளவுக்கு புள்ளிவிவரங்கள் கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், உடனடியாக ஏற்பட்ட ரத்த கொதிப்பின் விளைவாகவும் கொஞ்சம் தடாலடியாக பதிவெழுதிவிட்டேன்.//

வாங்க நண்பரே! இப்பத்தான் உங்க பதிவைப் படித்தேன். பட்டைய கிளப்பி இருக்கீங்க போல! உங்கள் பதிவின் லிங்க்கை கீழே கொடுத்து இருக்கிறேன்http://kirukkugiren.blogspot.com/2009/03/blog-post_13.html
அப்புறம், //உங்கள் அளவுக்கு புள்ளிவிவரங்கள் கையிருப்பு இல்லாத காரணத்தினாலும்,// இதென்ன காமெடி!. என்னிய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே! :))

Unknown says:

Befitting Reply!!

We all know the bravery of Karunathi Kudumbam Provite Limited when they weren't able to curb the atrocities of their own Alagiri and company.

Also, Karunanithi would not have forgotten the black days of E.V.R movement days when he was given refuge by an Andhanar in Valukuparai village. This guy hid behind Andhanar's protection from Police.

PARAMS

Anonymous says:

Nallathanthi Sir,

Nice post! I have linked to this post here - http://koottanchoru.wordpress.com/2009/03/16/சோ-ராமசாமி-பற்றி-பார்த்த/

அறிவிலி says:

////அப்புறம், //உங்கள் அளவுக்கு புள்ளிவிவரங்கள் கையிருப்பு இல்லாத காரணத்தினாலும்,// இதென்ன காமெடி!. என்னிய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே! :))////

காமராஜ், எம்ஜியார்,இந்திரா காந்தி,மிசா அப்படின்னு நெறைய விஷயத்தோட எழுதியிருக்கீங்கன்னு சொன்னா, காமெடியாக்கிட்டீங்களே...

நல்லதந்தி says:

//RV says:
Nallathanthi Sir,

Nice post! I have linked to this post here - http://koottanchoru.wordpress.com/2009/03/16//

மிகவும் நன்றி RV sir :)

narsim says:

டிஸ்கி சூப்பர்ங்க.

நல்லதந்தி says:

வாங்க நர்ஸிம் சார். வம்பே வேணாமுன்னுதான் அப்படிப் போட்டேம்.இருந்தாலும் வம்படியா வம்புல மாட்டிவிடப் பாக்குறீங்களே! :))

Anonymous says:

அசிங்கப் படுத்துவது கேவலப் படுத்துவது போன்றவை நாம் செய்வதல்ல.. ஈயத்தை காய்ச்சி உற்று, தலையை எடு, உறுப்பை அறு என்றெல்லாம் எழுதியது யார் என்பதை உங்கள் சோவைக் கேட்டுப் பாருங்கள்.. மற்றபடி அம்மணம் கோவணம் மரமண்டை போன்ற உயரந்த சொற்றொடர்கள் யார் உபயோகிக்கிறார்கள் என்பதை பதிவர்கள் கவனத்திற்கு விட்டுவிடுகிறேன். மீண்டும் சொல்கிறேன். நாங்கள் எங்கே மனிதம் என்று தேடுகிறோம்... அவர் எங்கே பிராமணன் என்று தேடுகிறார். அதில் பல அர்த்தங்கள் உள்ளது என்பதை நீங்கள் தான் கண் திறந்து பாரக்க வேண்டும்.
கந்தசாமி

நல்லதந்தி says:

அன்புள்ள அண்ணன் கந்தசாமி அவர்களுக்கு, கீழ்த்தரமான சொற்றொடர்களை உபயோகிப்பதில் வல்லவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும் எனவே அதைப் பற்றி விவாதம் வேண்டாம். திரு ராமு என்ன சொல்லவருகிறார் என்றால் ஒருவருடைய கொள்கைப் பற்றி விமர்சனம் செய்யுங்கள், ஆனால் அதில் ஏன் ஜாதியை இழுக்கிறீர்கள் என்பதுதான்.
இதில் எந்தக் குழப்பமும் இல்லையே!
நன்றி! :)

Anonymous says:

//அதைப் பற்றி விவாதம வேணடாம்///
ராமுவை வைத்து கேனை மரமண்டை என்றெல்லாம் எழுதிவிட்டு அதைப் பற்றி விவாதம் வேண்டாம் என்றால் இது என்ன மனு சாத்திரமா.?
///இணையத்திலோ ஜாதிவெறியும், ஜாதித் துவேசமும் தலை வரிதாடுகிறது////
வெளியில் எங்கும் இல்லையா.. எந்த நாட்டில் இருக்கிறீர்கள்.. எங்கே பிராமணன் என்று நானா கேட்கிறேன்..என்ன ஆயிறறு உங்களுக்கு .. சோவின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தால் அவரைப் போலவே பேசுவீர் போலும்..
கந்தசாமி

நல்லதந்தி says:

//ராமுவை வைத்து கேனை மரமண்டை என்றெல்லாம் எழுதிவிட்டு அதைப் பற்றி விவாதம் வேண்டாம் என்றால் இது என்ன மனு சாத்திரமா.?//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.... இப்பவே கண்ணைக் கட்டுதே!

K.S.Muthubalakrishnan says:

Thanthi Sir,

You had Show Real Ann Mahan.

Thanks

ravikumar says:

Go thro Mr.R.P.Rajanayam blog who had written about all Stars & Comedians it was neutral Writeup