இலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்! .....என்னாகும்!

Posted on Sunday, March 29, 2009 by நல்லதந்தி



ஊடகங்களிலும், இணையத்திலும் தமிழகமக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே இந்தப் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிக்கப் போவதாக பரபரப்பை ஊட்டிக் கொண்டு இருக்கின்றன. இதனால் இலங்கைப் பிரச்சனையில் தங்களுக்கு பெரும் அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் தத்தம் சடங்குகளைக் செய்து முடித்து விட்டன. 

இதற்குமுன் பொதுவாக எந்தத் தேர்தலிலும் இலங்கைப் பிரச்சனையை அரசியல் கட்சிகள் முன்நிறுத்தியதில்லை. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன செய்யப் போகின்றன என்பது இன்னும் தெரியவில்லை.

ஒரு வேளை தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே வாக்களிக்கப் போவதாக இருந்தால் என்ன நடக்கும்!. அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சிந்தித்தால் என்ன் ஆகும்!.

திமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையை நினைத்தால் நெஞ்சே பதறுது. வழக்கமாக, தமிழுக்கும், தலைவனுக்கும் தான் உயிர் கொடுத்துகிட்டு இருந்தோம். இப்போ இதுக்கும் சேர்த்தி உயிரைக் கொடுத்துகிட்டு இருக்கிறதைப் பாத்தா நிஜமாகவே எதாவது செய்யணும் போல இருக்கு. பிரச்சனை பெருசானதுக்கு காரணமே காங்கிரஸ்தான் அதனால அதுக்கு ஓட்டுப் போடக் கூடாது. திமுகாவுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா ஒரு வேளை பி.ஜே.பி ஜெயிச்சி தலைவர் வழக்கம் போல இந்தியாவை மொத்தமா காலி பண்ணலாமுன்னு மந்திரிப் பதவிக்காக தாவ நினைச்சாருன்னா இங்க ஆட்சி போயிடும். திமுக ஜெயிச்சாதானே இந்தப் பிரச்சனை. தலைவரோட ஆட்சியை காப்பாத்த வேறகட்சிக்குத்தான் ஓட்டு போடணும். 

அதிமுகாவுக்கு போடக் கூடாது. தேமுதிகவுக்குப் போடலாமா? வேணாம் அப்புறம் அவங்க வளந்துட்டா, நம்ம ஸ்டாலின், ஸ்டாலினோட மகன்,அழகிரி, அழகிரியோட மகன்,மகள், க்லாநிதி, கனிமொழி, அவுங்க மகன், மு.க.முத்து, அவுங்க மகன், தயாநிதி, அன்புநிதி, அறிவுநிதி,உதயநிதி, இம்சைநிதின்னு இன்னும் எத்தனை நிதி இருக்காங்களோத் தெரியிலை. அத்தனை பேரும் வசதியில்லாம நடுத்தெருவுக்கு வந்து கஷ்டப் படுவாங்க. விஜயகாந்தோட மாமன் மச்சானுங்கதான் நல்லா இருப்பாங்க. 

தமிழனை தமிழந்தான் அழிக்கணுங்கற கொள்கை என்னாகும். அப்போ மிச்சம் இருக்கிறது பி.ஜே.பி தான் அவுங்களும் இலங்கைப் பிரச்சனையில ஆர்வமாத்தான் இருக்காங்க. போனாப் போயிட்டு போவுது இந்த தடவை அவங்களை ஜெயிக்கவெச்சு இலங்கை பிரச்சனையை தீர்த்து புடலாம்.

அதிமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க என்ன பண்றது. நம்ம கட்சிக்கு ஓட்டு போட்டா ஒரு அம்மா மூணாவது அணி நாலாவது அணின்னு போயிட்டாங்கன்னா?. அதுக்கப்புறம் அந்த அணிப்பிரச்சனையைத் தீர்க்கவே நேரம் போயிடும். இலங்கைப் பிரச்சனைக்கு அம்மாவால நேரத்தை ஒதுக்கவே முடியாதே!. 

இந்த மூணாவது அணியச் சேர்க்கிற தேவகவுடா கும்பல் நல்ல காலத்திலேயே தமிழனுக்கு நல்லது செய்ய மாட்டாங்க. மூணாவது அணியை நம்புறது வேஸ்ட். காங்கிரஸுக்கு எப்படி போடறது இலங்கைப் பிரச்சனையில எதிரியே இவங்கதானே, அப்புறம் தானே இராஜபக்‌ஷே. திமுகவுக்கு நான் சுடுகாடு போனாலும் ஓட்டு போடமாட்டேன். 

விஜயகாந்து, ச்ச்சீ வேணாம். இந்த ஆளுக்கு என்னமோ நம்ம அம்மான்னு நினைப்பு. நான் கையை நீட்டறவனுக்கு ஓட்டு போடுன்னு சொல்றாரு. அம்மா டயலாகை அம்மா மட்டும் தானே பேசணும். அப்புறம் மிச்சம் இருக்கிறது. பி.ஜே.பி தான்!. சரி ஓட்டு ஏன் வேஸ்டா போவுணும் நான் போடாட்டாஅப்புறம் அழகிரி கும்பல் எப்படியும் போட்டும். அதனால பி.ஜே.பிக்கே போட்டு வைக்கலாம். 

ஒருவேளை எலக்‌ஷன் முடிஞ்சி அவங்க ஆட்சிக்கு வந்தா கருணாநிதி கவர்மெண்ட்டை டிஸ்மிஸ் செய்ய வைக்க அம்மா. பி.ஜே.பி யோட சேர்ந்தாலும் சேரலாம்.  அதனால இலங்கைப் பிரச்சனையும் போனாப்போவுதுன்னு தீர்ந்தாலும் தீரலாம்.

காங்கிரஸ் தொண்டர்: என்னய்யா இது!  எவனைக் கேட்டாலும் காங்கிரஸ் தான் இலங்கைப் பிரச்சனைக்குக் காரணமுன்னு சொல்றானுங்க். நம்ம ஆளு ஒருத்தன் தீக்குளிச்சி செத்தபுறம் விட்டுடிவானுங்கன்னு நினைச்சா!, அது இன்னும் வேகத்தை கிளப்பிடுச்சி!. அந்தாளு தீக்குளிச்ச மாதிரி நானும் தமிழந்தான்னு நிரூபிக்க காங்கிரசுக்கு ஓட்டு போடாம இருந்தாத்தான் ஆவும் போலிருக்கு!. 

யாருக்குப் போடலாம் திமுகவுக்கு போட முடியாது. மொத்தப் பிரச்சனையும் அந்தாளாலேதான். அவரு நல்லவராகாட்டிக்க மொத்தப் பழியையும் காங்கிரஸ் மேல தானே போடறாரு!. இல்லேன்னா இந்த திருமாவளவன் காங்கிரஸ் ஆபிஸிலையே நம்மளை அந்தக் குத்து குத்துவாரா?. இதுக்கா வேண்டியே திமுக வுக்கு வோட்டு கிடையாது. 

அம்மாவுக்குப் போடலாமா?. அது நல்லாத்தான் இருக்கும் ஆனா அவரு சோனியாவைப் பத்தி பல உண்மைகளை ஜனங்ககிட்டயே சொல்லிடறாரு. காங்கிரஸ் கொள்கையேஅவருக்குத் தெரியிலை. நாம ஆபிஸூக்குள்ளாறதானே அடிச்சுக்குவோம். 

தேமுதிக வுக்கு போடலாமுன்னா அந்தாளு நம்ப வெச்சி கழுத்தறுக்கிற பாலிஸியே நம்ப கிட்டயே காட்டுறாரே!. அது காங்கிரஸுக்குத் தானே சொந்தம். சிறுத்தைகளுக்கு எப்படி போடறது. அவனுங்க குத்தின குத்து இன்னும் வலிக்குதே!. பா.ம.க வேணாம், நம்ப குணம் அப்பிடியே இருக்கு!. 

மீதி... பி.ஜே.பி தான் ...அதான் நல்லது நாம பண்ணின குழறுபடியை அஞ்சி வருஷம் உக்காந்து கஷ்டபட்டு சரி செஞ்சி அதனால ஜனங்ககிட்ட கெட்ட பேரு எடுத்திகிட்டு வரட்டும். அப்புறம் நாம ஜாலியா உக்காந்துகிலாம். அதனால பி.ஜே.பிக்கே ஓட்டு போடலாம். நாட்டுப் பிரச்சனையோட, இலங்கைப் பிரச்சனையும் சேத்தி வெச்சிகிட்டு திண்டாடட்டும்.

தேமுதிக தொண்டர்:  இவரு கை காட்ற இடத்தில குத்தலாமுன்னா அங்கே என்னா இராஜபக்‌ஷே மூக்கா இருக்கு?.... ஆங்!..போன சட்டசபை எலச்ஷனிலேயே ஒரேஒரு தொகுதி தானே கெலிச்சாரு?. மேலே இருவுரு போனாலும் ஒண்ணியும் நடக்காதுன்னு தெரியுது. ஆங்!...அப்புறம் போய் மேல இருக்கிறவுங்களைக் கெஞ்சணும்.  அங்க காங்கிரஸ் தான் பிரச்சனையன்னா அடுத்தாப்புல வர்றது பி.ஜே.பி தானே. நமக்கு இலங்கை பிரச்சனைய தீக்கிறத்துக்கு அடுத்தாப்புல யாரு மேல வர்றாங்களோ அவிங்கதானே? ஆங்....

நாம எப்படியும் தமில் நாட்டில தானே ஆச்சி பன்ன போறொம் . அண்ணனும் இந்தத் தேருதல்ல நிக்க மாட்டேன்னுதானே சொன்னாரு!.அப்ப இந்த ஓட்டு அண்ணனுக்கு எதுக்கு போட்டுகிட்டு, நாம்பளே,  அது வேணாம், இதுவேணாமுன்னுட்ட்டு தானே இவருக்கு ஓட்டு போடறோம். அதானால சும்மா போற உடம்புல பம்பரம் விட்டாக்க தப்பு இல்லன்னு தலைவர் சொன்னா மாதிரி வீணாப் போற ஓட்டை வீணாப் போற பி.ஜே.பிக்கே போட்டுறலாம் ஆங்...... 

பா.ம.க. தொண்டர்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! என்னால தாவ முடியில!. ஒரு தடவை தாவினா....சரி போவட்டும்ன்னு விட்டிடலாம். இத்தினி தாவுக்கு ஒடம்பு தாங்கிலயே!. அன்பு மணி அண்ணணாவது மல்டி ஸ்பெஸாலிடி ஆசுபத்திரிக்கு வந்து நம்பளை விசாரிச்சி இருக்கலாம்.  நம்ப கொள்கையே இ.காங்கிரஸின் வாரிசு கொள்கையைத்தானே எதித்து இருந்திச்சி!. மோதிலாலாம், சவகருலாலாம், அப்புறம் இந்திராவாம், சன்சையாம், பின்னே இராசிவாம். இதை எதிர்த்துதானே அரசியலைத் தொடங்கினோம். இதே வாரிசு அரசியல் என் கட்சியில் நடந்தால் சவுக்கால அடிப்போம், முச்சந்தியில் உதைப்போம் முன்னு சொன்னீங்க!. 

இப்ப உங்க வூட்டாளுங்களைத் தவிர யாரும் வரமுடியிலையே!. சவுக்க எங்கே ஒளிச்சி வெச்சிருகீங்கன்னே தெரியலை. நீங்களே மொத்த காங்கிரஸ் கொள்கையையும் குத்தகைக்கு எடுத்து இருக்கீங்க!.சரி விடுங்க. இலங்கைப் பிரச்சனைக்காக நீங்க இந்த காங்கிரஸ் அரசை விட்டுட்டு முன்னாடி வந்து இருக்கலாம், அதையும் நீங்க பண்ணலை. பண்ணவும் மாட்டீங்க!. வேற எதுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா காடு வெட்டிய கண்டம் பண்ணதால திமுக வேணாம். 

அம்மா இப்பத்தான் இலங்கைப் பிரச்சனையில் நுழைஞ்சதாலே அதிமுகவும் வேணாம். தேமுதிக நம்ப பரம்பரை எதிரி அதனால அதுவும் வேணாம். மிச்சமிருக்கிறது, பி.ஜே.பி தான். அதுக்கே போட்டுத் தொலையுறேன். இதிலையும் நம்ப கொள்கைதான் நீங்க காங்கிரஸை எப்பவுமே கன்னா பின்னான்னு திட்டி இருக்கீங்க!. இது வரைக்கும் பி.ஜே.பி யை திட்டி நான் பாத்ததே இல்லை. நீங்க பிற்பாடு ஒட்டறதுக்கு வசதியாயிருக்குமுன்னு அதுக்கே ஓட்டு போடப்போறேன்.

திருமாவளவன் தொண்டர்: அண்ணன் சொல்லறது காங்கிரஸை அழிக்கணுமுன்னு, அப்போ காங்கிரஸசுக்கு ஓட்டு போடக்கூடாது. அதனால காங்கிரஸ் கட்டிக் காப்பத்திற அரசுக்கும் ஓட்டு போடக்கூடாது. அப்படியன்னா அது திமுக அரசு!. ..சரி திமுகவுக்கும் ஒட்டு கிடையாது. மிச்சம் இருக்கிறது நம்ப அண்ணன், அவர் திமுக சப்போர்ட் அதனால அண்ணன் சொன்னபடி அவ்ருக்கே கூட ஓட்டு போடகூடாது. வேற யாருக்குப் போடலாம். 

அம்மாவுக்குப் போடலாமுன்னா அண்ணனுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்.  தேமுதிகவுக்கு போடலாமா? .. வேணாம். அவரு பா.ம.கா வுக்கே பிரச்சனையாவும் போது நமக்கும் பிரச்சனையாவலாம். சரி... இருக்கவே இருக்கு பி.ஜே.பி. அவங்களுக்கு ஓட்டு போட்ட நாளைக்கு நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அப்படியே தெரிஞ்சதுன்னாலும், ஒரு வேளை அவுங்க மேலஆட்சி புடிச்சிட்டா நம்மளை அண்ணணே பாரட்டுவாரு!. காங்கிரஸ் எதிரின்னா பி.ஜே.பி நண்பன் தானே!

பி.ஜே.பி தொண்டர்: அப்போ இலங்கையில எதோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும் போலிருக்கு!. இல்லையன்னா நம்ம தலைவருங்க அறிக்கை விடுவாங்களா?. எதா இருந்தாலும், நாம பி.ஜே.பிக்குதான் ஓட்டு போடணும். 

அவுங்களுக்கு நம்மை உட்டா வேற யாரும் கதி இல்லையே!. நமக்கும் தமிழ் இரத்தம் தானே ஓடுது!. இலங்கைப் பிரச்சனையை நாம தீர்த்தே ஆகணும். நாம ஆட்சிக்கு வந்தா இந்தப் பிரச்சனையைத் தீர்க்காட்டியும் அடுத்த ஆட்சி வர்ற வரைக்கும் பிரச்சனையில்லாம மெயிண்டைன் பண்ணா பத்தாதா?. அப்புறம் அவங்களாச்சி பிரச்சினையாச்சி!.

எலக்‌ஷன் முடிஞ்சி ரிசல்ட் அன்னிக்கு “ அண்மைச் செய்தி” .

40 தொகுதிகளில் நிற்க ஆளில்லாமல் தடுமாறித்தவித்து பிறகு பி.ஜே.பி பல கட்சிகளைத் தயாரித்து கெளரவத்திற்கு கூட்டணி அமைத்துக் கொண்டது தெரிந்ததே!. தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளன. 

ப.ஜ.க - 20 ( பாரதீய ஜனதா கட்சி)

அ.இ.ச.ம.க (?) ( ஸ்ஸ்ஸப்பா)-  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  சரத்குமார் பிராண்ட் - 10

அ.இ.ந.க(?) (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா)- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி  கார்த்திக் பிராண்ட் - 10

மொத்தம் நாற்பதிற்கு நாற்பது வென்றுள்ளன!

17 Responses to "இலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்! .....என்னாகும்!":

dupuk says:

if so, BJP people like you will be very happy. You may surely try MODI to be PM.

Anonymous says:

:)))

ஆ.ஞானசேகரன் says:
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் says:
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் says:
This comment has been removed by the author.
நல்லதந்தி says:

ஞான சேகரன்! என்னத்தை சொல்ல வந்திங்க!. சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க!... அப்புறம் எதாவது கெட்ட வார்த்தையா இருந்தா :) ந்னு மட்டும் போடுங்க நான் புரிஞ்சிக்கிறேன்!.மத்தவிங்க மின்னாடி மானத்தை வாங்கப் படாது! :)

Anonymous says:

vote against congress...
good

கிரி says:

//இவரு கை காட்ற இடத்தில குத்தலாமுன்னா அங்கே என்னா இராஜபக்‌ஷே மூக்கா இருக்கு?.... //

ஹா ஹா ஹா செம காமெடி

நல்லதந்தி says:

வாங்க அனானி!, வாங்க கிரி! வருகைக்கு நன்றீ!

Rajaraman says:

வித்தியாசமான Thinking and வித்தியாசமான Logic. ஒக்கே. Election முடிந்து Result வர வரைக்கும் அடிச்சு தூள் கிளப்புங்க...

KARTHIK says:
This comment has been removed by the author.
KARTHIK says:
This comment has been removed by the author.
வைகோ says:

அட என்னங்ணா பதிவை இப்டி எழுதிட்டிங்க. எல்லாரும் அம்மாவுக்கே போடனும்னு சொல்லி இருக்கனும். அப்போ தான தமிழ்நாட்டையே சுடுகாடாக்கி அதுக்கு கூரை போட்டு அதுலையும் அடிச்சி கொடைக்கானல்ல ப்ளசண்ட் ஸ்டே மாதிரி இன்னொரு ஓட்டல் வாங்கி சிறுதாவூர்ல கொஞ்ச நாள், கோடநாட்ல கொஞ்ச நாள் அப்டியே புது ப்ளசண்ட் ஸ்டேல கொஞ்ச நாள்னு ரெஸ்ட் எடுக்கலாம். போர் அடிச்சதுனா ரத்தத்தின் ரத்தங்களை விட்டு எதுனா காலேஜ் பொண்ணுங்களை பஸ்ஸோட கொளுத்தி விளையாடலாம்.

இதெல்லாம் விட்டு பிஜேபிக்கு ஓட்டு போடனும்னு சொல்லிட்டிங்க்ளே. மனுசுக்கு எம்புட்டு கஷ்டமா கீது தெரியுமா? :(

வால்பையன் says:

பா.ம.க தொண்டர் ஒருத்தர் சொன்னார்,
இப்படி தாவி தாவி நாம குரங்குல இருந்து வந்தோம்னு தலைவர் ஞாபகபடுத்துறார்ன்னு!

வால்பையன் says:

நல்ல காமெடி!
மதிமுக விட்டு போச்சே!
ஓ அங்க தான் தொண்டர்களே இல்லையோ!

நல்லதந்தி says:

வாங்க ராஜாராம்! கொஞ்சம் லேட்டாயிடுச்சி!. பட்டைய கிளப்புறமோ இல்லையோ, இதை வெச்சி மொக்கையாவது போடலாம்.

கார்த்திக்! என்னாச்சி! :)

வைகோ! கலைஞருக்கே ஓடு போடச் சொல்லியிருந்தா இந்தியாவுக்கு அடுத்த பட்ஜெட்டுக்கான செலவை அவர்கிட்ட இருந்தே வாங்கியிருக்கலாம். இதை சொல்லாம போயிட்டீங்களே! :)

வால்! நிஜமாகவே வைகோ கட்சி மறந்து போயிடுச்சி!. நாமளும் அவரை நோகடிச்சி அவரு வேதனையை எச்சு படுத்தணுமா?.

Anonymous says:

:)