ரொம்ப நாள் கழித்து வர்றதால் அறிமுகப் படுத்திக் கொள்வேனேன எதிர்பார்க்க வேண்டாம்.
விஷயம் இதுதான்!.
நான் சமீப காலமாய் இரும்புத்திரையைப் படிக்கிறேன். அவர் நல்ல மாதிரியாய் எழுதுவதில் சிறந்தவர்களில் ஒருவர். இன்று காலையில் அவருடைய வலைப்பூவிற்கு போனபோதுதான், யுவகிருஷ்ணா என்கின்ற லக்கி லூக் என்ற நபர் ஜெயமோகனைப் பற்றி எழுதியுள்ள விஷயத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு அவருடைய வலைப் பக்கம் போய்ப் பார்த்தேன்.
சகட்டு மேனிக்கு அவர் குருநாதர் கு.நக்கியின், கு. நக்கி பாணியிலேயே விளாசுவதைப் பார்த்தால் அவருக்கு எந்த அறிவிமில்லை! என்பது தெரிகிறது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், என்னைப் போன்ற் சிலர் அவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்! :).
அதற்கு அவசியமே இல்லை!.
அவருக்கு எந்தவித அறிவும் இல்லை என அவர் சார்ந்த கட்சியை வைத்தே அவரை அளவு கோலிடுவது எல்லோர்க்கும் இயல்பான ஒன்றுதான் என்றாலும், நான் அப்படி வேகமாக முடிவு செய்யவில்லை. ஆனாலும் எனக்கு நடந்தது என்னவென்றால்!
சில அல்லது பல மாதங்களுக்கு முன் அவரது வலையில் அண்ணா இறந்து அடக்கம் நடக்கும் போது ஒரு கோடிப் பேர் கலந்து கொண்டனர் என்று எழுதினார். நான் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் அய்யா! அண்ணா இறந்த போது தமிழ் நாட்டு ஜனத்தொகை நான்கு கோடிக்குள்ளாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது, ஆண்கள் ஒன்றரைக் கோடி, பெண்கள் ஒன்றரைக்கோடி, குழந்தைகள் ஒரு கோடி என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டார்கள். ஒரு கோடி ஜனம் ஒரே இடத்தில் சென்னையில் திரள்வதெப்படி ? அப்படித் திரண்டால் சென்னைதான் தாங்குமா?. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிற்பாடு தன் மேல் புகழுரைத்து எழுதுமாறு பணித்து பிறர் அவர் மேல் புகழ்ந்து எழுதிய பாடல்களில் கூட ”நான்கு கோடி மக்களுக்குத் தலைவர் அண்ணா நல்லதம்பி என்றழைத்த கலைஞர்” என்று தான் எழுதினார்கள். நீங்கள் சொன்ன ஒரு கோடி மக்கள் என்ற தகவல் பிழை என்று என்று எழுதினேன். அவர் வழக்கம் போல கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொருட்டு அதை வெளியிடவில்லை. ( உங்களுக்காக ..., அன்று இறுதி மரியாதையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர். அன்று அதே பெரியவிஷயம், இன்றும் அது பெரிய விஷயம் தான்)
இந்த இலட்சணம்தான் அவரது சரித்திர அறிவின் எல்லை. எப்படி அய்யா இதைச் சொல்கிறாய் என்றால் பதில் இல்லை!. பிற்பாடு அதை கின்னஸ் புத்தகத்தில் படித்ததாக எழுதினார். மில்லியனுக்கும், பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லையோ என்னவோ அப்படி ஒரு படிப்பு!.
சரி புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்கின்ற அளவிற்குத்தானா உமது அறிவு( நான் கின்னஸை மட்டும் வைத்துச் சொல்ல வில்லை)., சுய சிந்தனை ஏதும் கிடையாதா?.. அப்புறம் என்ன அறிவு..ஒரு வேளை இதுதான் பகுத்தறிவோ என்னவோ!. எத்தனைப் புத்தகங்களில் பிழையான தகவல்களைப் பார்க்கிறோம். ஒருகாலத்தில் சரியானது என கருதப் பட்ட எத்தனை விஷயங்கள் பிழையானது என்று மீண்டும் அதே புத்தகத்திலேயே கூட அடுத்த பதிப்பின் போது திருத்தி வருவதை நாம் பார்க்கிறோம்.
இந்த அறிவை வைத்துக் கொண்டே அவர் ஜெயமோகனின் கட்டுரையை விமர்சனம் செய்ய முடிகிறதென்றால் அவரது கட்சிக்கான அடிப்படைத் தகுதி மட்டும் சரியான முறையில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது. அதைத் தவிர அவருக்கு எந்தத் தகுதியும் சரி.., அறிவும் இல்லை என்பது நம்மைப் போன்றவர்களுக்கு விளங்கும்.
எல்லாருக்கும் தெரிந்த, இன்னும் அதை நேரில் பார்த்த பலர் இருக்கும், 40 வருட சரித்திரமே அவருக்கு இந்த அளவுதான் என்ற போது, வரலாற்றைப் பற்றிப் பேச இம்மியளவு கூட தகுதி இல்லாத இப்படிப் பட்ட நபர்கள் எல்லாம் இணையம் இலவசமாகக் கிடைகிறதே என்று, கண்டபடி எழுதி கூத்தடிப்பதைப் பார்த்தால், இணையத்தைக் கண்டுபிடித்தவர் நாண்டு கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை!. அவர் செத்திருந்தாலும் , அது இவரைப் போன்று எழுதுபவர்களால்தான் இருக்கும்.
இந்த அல்லகை அ,ஆ,இ,ஈ தெரிந்த ஒரே காரணத்துக்காக புத்திசாலி என்று நினைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா?.
சாக்கடை ஒரத்தில் இது நீச்சல் குளம் என்று எழுதியிருந்தால் அதில் யோசிக்காமல் குதித்து விடும் இந்த அல்லகை தற்குறி.,, படித்திருப்பதில் பிரயோசனம் உண்டா? ( பி.கு ஒரு வேளை படித்திருந்தால்! :) )
22 Responses to "ஜெயமோகனும், சாருவின் அல்லகையும்!":
அறிவிருக்கா உனக்கு ஞாயித்துக்கிழமை சாயந்திரம் இடுகை போடறியே!
கமெண்ட் போகுதான்னு செக் பண்றேன்! :)
உடனே மைனஸ் ஓட்டா?... நான் பெர்ய மன்ஸன்தான் போலக்கீது!
இணையம் இலவசமாக கிடைப்பதால் நீங்கள் எழுதுகிறீர்கள் அதைப்போல் அவரும் எழுதுகிறார்.ஆகா இணையம் தான் தோன்றிகளின் சொர்ககமாக இருக்கிறதே?
அனானி... குப்பைய கூட்ட வெளக்குமாரு வேணுமா இல்லையா?
//நான் சமீப காலமாய் இரும்புத்திரையைப் படிக்கிறேன். அவர் நல்ல மாதிரியாய் எழுதுவதில் சிறந்தவர்களில் ஒருவர். இன்று காலையில் அவருடைய வலைப்பூவிற்கு போனபோதுதான்,//
ஏன் இந்த கொலைவெறி நல்லதந்தி.
நான் உங்களை முன்னாலே படித்திருக்கிறேன்.மறுபடியும் ரொம்ப நாள் கழித்து நீங்கள் திரும்பி வர நான் தான் காரணமாகி விட்டேனா.
மற்றபடி தகவல் பிழை நான் கூட செய்து இருக்கிறேன்.பதினைந்தாம் நுற்றாண்டில் களப்பிரர் என்று எழுதி விட்டேன்.நீங்கள் தான் அதை சுட்டிக் காட்டினீர்கள்.எல்லோருமே செய்யக் கூடியது தான்.அப்படி அடி வெளுப்பார்.எனக்கு அமைதியாக சுட்டிக் காட்டினாரே என்று உங்கள் மேல் ஒரு ஆச்சர்யம் வந்தது.
முழுப் பதிவுமே தகவல் பிழையோடு இருந்தால்.இனக்கலவரம் நடந்தது ஒரு சின்ன இடத்தில் தான்.அது நைஜீரியா முழுவதும் நடந்தது என்று சொல்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
//அக்பரினால் மட்டுமே இந்தியாவை ஓரளவேனும் ஒருகுடைக்கீழ் ஆள முடிந்தது என்பது ஆச்சரியமல்ல.//
அலாவுதீன் கில்ஜியும்(மதுரை வரை) ,அவுரங்கசீப்பும் அக்பரை விட நிறைய இடங்கள் ஆண்டார்கள்.இப்படி நிறைய இடங்கள்.அதையும் நீங்கள் சொல்லியிருக்கலாம்.நானும் கொஞ்சம் தெரிந்திருப்பேன்.
ஆனால் இந்த பதிவில் சொல்வதற்கு ஒன்றும் எனக்கு தெரியவில்லை.லக்கி எது சொன்னாலும் கட்சி சார்பாகவும்,சாரு சார்பாகவும் பார்க்கப்படுகிறார்.ஜெயமோகன் பதிவிலுமா என்பது இன்னொரு ஆச்சர்யம்.இதுவும் என் கருத்து தான்.அந்த மைனஸ் நான் போடவில்லை.பின் குறிப்பு இதுவரை யாருக்கும் போட்டதில்லை.
I completely agree with you.
These half boiled people pretend like think tank.
mmm நீங்க சொல்வது சரின்னுதான் தோனுது
சரி பின்னூட்டதுல விவாதம் நடக்குன்னு நினைக்கிறேன் பார்ப்போம்
இரும்புத்திரை வந்ததிற்கு நன்றி!. நிறைய சொல்லலாம். ஆனால் இப்போ அதற்கு நேரம் இல்லை.
இந்த பதில் நீங்கள் வந்ததை நான் தெரிந்து கொண்டதை உணர்த்தத்தான்.
காலை பேசுவோமா?.
நன்றி!
பி.கு நேரம் இல்லை என்பதை வைத்து நான் ரொம்ப பிஸியான ஆள் என்று நினைக்க வேண்டாம். (த.அ.போ):)
வணக்கம் நண்பர் நல்ல தந்தி. நம் நாட்டை எழுதுவதை விட, அடுத்த நாட்டைப் பற்றி எழுதும் போது சற்று கவனமாக எழுத வேண்டும் நண்பரே. மேலும் இங்கு பல இந்தியர்கள் குடும்பத்துடன் இருக்கின்றோம் என்பதையும் ஞாபகத்தில் திரு. ஜெயமோகன் அவர்கள் ஞாபகத்தில் வைத்து எழுதியிருக்கலாம்.
அவர் எழுத்தில் பல தகவல் பிழைகள் உள்ளன நண்பரே. அந்த தகவல் பிழைகளைப் பற்றி நண்பர் இரும்புதிரை வலைப்பூவில் பின்னூட்டமாகப் போட்டு இருக்கின்றேன்.
நைஜிரியாவில் வேலை என்றாலே பலரும் தயங்கும் நேரத்தில், ஜெயமோகனின் எழுத்துக்கள் சிலரை வேலைக்காக செல்வதை மறு யோசனை செய்ய வைத்துவிடாதுங்களா?
சற்று பொறுப்புணர்ச்சியுடன் அவர் எழுதியிருக்கலாம் என்பது என் கருத்துங்க.
கொலை வெறியல்லாம் இல்லை இரும்புத்திரை. நிஜமாகவே நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள்.
லக்கிலுக் என்கின்ற நபர்க்கு ஜெயமோகன் கட்டுரையில் உள்ள வரலாற்றை விட இஸ்லாம் என்று எழுதியதில்தான் பிரச்சனை என்பது நன்றாகத் தெரிகிறதே!. அங்கு இருக்கும் மற்றொரு மதத்துக்காரர்கள் கிருத்துவர்களே அன்றி இந்துக்கள் அல்லர் என்பதை யாராவது இந்த நபருக்குத் தெரிவிக்க வேண்டும்.இல்லாவிடில் அவரது போலி மதசார்பின்மையில் தீட்டு வந்து விடும்.
நானும் நீங்களும் பள்ளியில் படித்த வரலாற்றுப் பாடத்தை ஜெயமோகன் படிக்காமலா இருந்து இருப்பார்.
”இந்தியவரலாற்றில் என்ன வேறுபாடு? இங்குள்ள இஸ்லாம் அல்லாத பேரரசுகள் இஸ்லாமை கட்டுப்படுத்தி பேரழிவில் இருந்து இந்தியாவைக் காத்தன என்பதே. தங்குதடையிலா அதிகாரம் இஸ்லாமுக்கு எப்போதுமே கிடைத்ததில்லை. ராஜபுத்திரர்கள், அதன்பின் விஜயநகரம், அதன் பின் மராட்டியர்கள் என வலுவான எதிர்விசை எப்போதும் இருந்தது. எந்நிலையிலும் போர் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தது. ஆகவே சமரசம் மூலமே இஸ்லாமியர் ஆளமுடிந்தது. நேரடி ஆட்சி அமையவில்லை, கப்பம் கட்டும் நாடுகளின் தொகையாகவே இஸ்லாமிய ஆட்சி நீடிக்க முடிந்தது.”
இதில் என்ன வராலாற்றுப் பிழை இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.வட நாட்டை விட தென்னாட்டில் இஸ்லாமியத்தாக்கம் மிகவும் குறைவாக இருப்பது நமக்கே தெரியுமே, அவர் சரியான காரணத்தைதானே கூறியிருக்கிறார்.
அப்புறம் நீங்கள் ஒவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசு அக்பர் காலத்தைவிட பரந்திருந்தது என்று கூறியிருந்தீர்கள். நிஜம் தான். ஆனால் அவ்வளவு பெரிய பேரரசு அவர் காலத்திற்குப் பின் விரைவாக ஏன் அழிந்தது?. ஒரங்கசீப் பிற்கு பின் யார் ஆண்டார்கள் என்பதைக்கூட நம்மால் உடனடியாகச் சொல்ல முடியாதே!
நண்பர் இராகவன் நைஜீரியா அவர்களே!
நைஜீரியாவில் மதத்தை வைத்துப் பிரச்சனைகள் உள்ளதை நான் முன்பே படித்திருக்கிறேன்.
அவர் சொல்வதில் தகவல் பிழை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது பற்றி நான் பேச ஒன்றுமில்லை. ஆனால் அதற்காக சகட்டுமேனிக்கு தரக்குறைவாக விமர்சிப்பதை எப்படி ஒத்துக் கொள்வது. அவர் கொடுத்த தகவல்களில் இன்ன பிழை இருக்கிறது என்று எழுதலாமே தவிர கொக்குமாக்காக ஏன் எழுத வேண்டும்.
இன்னொரு விஷயம் என் ஊரில் மதக் கலவரம் நடக்கவில்லை என்பதை வைத்து நான் இந்தியாவில் மதக் கலவரமே நடந்ததில்லை என்று எழுத முடியுமா? :)
உங்கள் வருகைக்கு நன்றி!
பி.கு நீங்கள் நைஜீரியா நிலவரத்தைப் பற்றி ஒரு இடுகை இடலாமே?
ரைட்டு!!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கீங்க. (வெகு நாடகள் கழித்து எழுதுவது சொன்னேன்).
கலக்குங்க
இது பற்றி எழுதலாம் என நினைத்திருந்தேன். நீங்கள் சரியாக எழுதி இருக்கிறீர்கள்.
அந்த பதிவின் நோக்கமே ஜெமோ பற்றி அவதூறு சொல்வது தான். பிழை திருத்தமோ / கருத்து பறிமாற்றமோ கிடையாது.
எழுதுவதற்கு சரக்கு எதுவும் இல்லையென்றால் இப்படி தான் எழுத தோன்றும் போல :)
ரொம்ப நாளா இதுக்கு தான் வெயிட் பண்ணிங்களா!?
//அந்த பதிவின் நோக்கமே ஜெமோ பற்றி அவதூறு சொல்வது தான். பிழை திருத்தமோ / கருத்து பறிமாற்றமோ கிடையாது.//
சரியாச் சொன்னீங்க!. இந்த எரிச்சல்தான் எனக்கும் வந்தது!
//வால்பையன் said...
ரொம்ப நாளா இதுக்கு தான் வெயிட் பண்ணிங்களா!//
என்னக் கொடுமை சரவணன்! அப்படிங்கறீங்களா? :)
நன்றி Temple Jersey !
நன்றி பிரியமுடன் பிரபு!.
//பின்னூட்டதுல விவாதம் நடக்குன்னு நினைக்கிறேன்//
விவாதம் எல்லாம் நடக்காது!. இணைய அரசியல் அப்படி!
//சகட்டு மேனிக்கு அவர் குருநாதர் கு.நக்கியின், கு. நக்கி பாணியிலேயே விளாசுவதைப் பார்த்தால்//
அனல் பறக்கிறது.
:)
http://nesamithran.blogspot.com/2010/03/blog-post_22.html
அண்ணே இதை கொஞ்சம் படிச்சுப் பாருங்க...
//அண்ணே இதை கொஞ்சம் படிச்சுப் பாருங்க...//
படித்தேன் நண்பர் இராகவன்!. நான் என்னுடைய அபிப்பிராயத்தை அங்கே சொல்விட்டிருக்கிறேன். நன்றி!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment