நண்பர் RV எழுதிய இடுகையைப் பார்த்ததும் வந்த நினைவுகளால் எழுதியது!. முன்பே தேவரைப் பற்றி என்னுடைய இடுகை.
இயக்குனர் Sp.முத்துராமனின் வாழ்க்கையில் தேவரைப் பற்றிய அனுபவத்தைச் சொன்னது இது!.
ஒரு முறை முத்துராமன் ஸ்டியோவிற்குள் நுழையும் போது தேவரின் கார் வெளியேறிக்கொண்டிருந்தது. முன் இருக்கையில் தேவர் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்த SPM தேவரைப்பார்த்து வணக்கம் சொன்னார்.அதை தேவர் கவனிக்கவில்லை. கார் கிளம்பிவிட்டது. ஆனால் SPM, தேவர் கவனிக்கவில்லை என்பதை கவனித்து விட்டதால் அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்தாததை பெரிதாக எண்ணாமல் செட்டில் தனது வேலையைக் கவனிக்க சென்று விட்டார்.
ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அந்த கார் அதே ஸ்டியோவில் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தேவர் நேராக முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த படத்தளத்திற்குச் சென்று, முத்துராமனிடம், “தம்பி, மன்னிச்சிக்கோங்க!. நான் காரில் இருந்த போது நீங்கள் கும்பிட்டதை கவனிக்க வில்லை. டிரைவர் தம்பி சொன்னவுடம் ஓடி வருகிறேன்!. வணக்கம்! தம்பி!. “ என்றாராம்.
முத்துராமன் இதைச் சொல்லும் போதே அவருக்கு கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறின. எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர், இந்தச் சம்பவம் நடக்கும் போது முத்துராமன் ஒரு சாதாரண இயக்குனராக மட்டுமே இருந்தார். பின்னர்தான் இரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் ஆனார். ஆனால் ஒரு சிறிய இயக்குனர் வணக்கம் சொன்னதற்கு, பதில் வணக்கம் தான் செலுத்தாததை ( தான் கவனிக்காமல் இருந்தால் கூட ) எண்ணி திரும்ப வந்து வணக்கம் சொன்னதை நினைத்தாலே, தேவரின் பண்பு வியக்க வைக்கிறது.
இன்னொன்றையும் Sp.முத்துராமன் குறிப்பிட்டார். பொதுவாக, வினியோகஸ்தர்களுக்கு படத்திற்கு ஐந்தாண்டு உரிமை. அதற்க்குப் பின்னால் மீண்டும் அந்த உரிமையை தயாரிப்பாளர்கள், வேறு ஒரு வினியோகஸ்த்தருக்கு விற்பனை செய்வார்கள். இந்த முறையில் தயாரிப்பாளர்களுக்கு, மீண்டும் ஒரு வசூல் பார்க்க வாய்ப்பு. ஆனால் தேவர் அம்மாதிரி செய்வதில்லை. ஒரு முறை ஒரு வினியோகஸ்தருக்கு ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதோடு வெளியிடுவதற்கு உண்டான எல்லா உரிமையும் அந்தந்த வினியோகஸ்தர்களுக்கே!.
இதற்கு தேவரின் வியாக்கியானம் என்னவென்றால் ‘ படத்தை வித்தாச்சி!. நடிகருங்க பணம் வாங்கியாச்சி!, எனக்கொரு லாபம் கிடைச்சாச்சி!, முருகனுக்கும் அவனுக்கு வேண்டிய லாபம் வந்தாச்சி!, அப்புறம் என்ன!’ என்பாராம். இதைச் சொல்லிய பிறகு SPM சொன்னது, இந்த மாதிரி அவர் செய்யாமல் இருந்தால் இன்றைக்கு தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டமடைந்து இருக்காது. அதை இந்த வருமானம் ஈடு கட்டி இருகும். தேவர் ஃபிலிம்ஸும் நொடித்திருக்காது!.
நிஜம்தானே! எம்.ஜி.ஆர், இரஜினி படங்களின் ரீ கலக்ஷனே இன்றைய புதுப் படங்களின் வருமானத்தை மிஞ்சுமே!.
ஹிந்திப் படம் எடுக்க ஆசைப் பட்ட தேவர், பாம்பே சென்று அன்றைக்கு வடக்கில் புகழ் பெற்று விளங்கிய ஒரு கதாநாயகனைப் பார்த்தார். தேவரின் சட்டை கூட போடாத open பாடியைப் பார்த்த அந்த ஹீரோ இவரா படம் எடுக்கப்போகிறவர், என்று அலட்சியமான பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.
தேவர் அவரிடம் ஐயா நான் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஒரு படத்திற்கான தொகை என்ன என்று கேட்க, அந்த ஹீரோவோ இந்த பண்டாரப்புரடியூஸரைப் பயமுறுத்தி வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து அவர் அன்றைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொகையைவிட அதிகமாகச் சொன்னார். தேவர் ஏற்கனவே அந்த ஹீரோவின் வழக்கமான விலையைத் தெரிந்து கொண்டு அவர் வாங்கும் முழுத்தொகையையும் தனது மடியில் கட்டிக் கொண்டே வந்து இருந்தார். ஹீரோ வழக்கமான தொகையை விட அதிகம் சொன்னவுடன் கொஞ்சமும் கலங்காமல், தன் மடியில் வைத்திருந்த தொகையை ஹீரோவின் கையில் கொடுத்து விட்டு, மிச்சம் உள்ள தொகையை சென்னைக்கு வந்தவுடன் கொடுப்பதாகச் சொன்னர். அதைக் கேட்டு, முழுத்தொகையையும், ஒரே மூச்சில் கொடுத்த தயாரிப்பாளரை இதுவரைப் பார்த்திராத அந்த ஹீரோ அசந்துவிட்டார். தேவருக்கு உடனே கால்ஷீட் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.
படம் தொடங்கியது. முதலில் ஒழுங்காக படப் பிடிப்பிற்கு வந்து கொண்டிருந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக, வழக்கம் போல பாம்பே ஸ்டைல் பாணிக்கு மாறிவிட்டார். படப்பிடிப்பு மத்தியானத்திற்கு மேல் துவங்கியது. சில சமயம் ஹீரோ மொத்தமாக வராமல் படப் பிடிப்பு நின்றும் போவதுண்டு.
பொதுவாகவே பாம்பே பட உலகிற்கும்,தென்னிந்திய பட உலகிற்கும் பெரிய வித்தியாசமுண்டு, சாதாரண பஸ்ஸிற்கும், விரைவு பஸ்ஸிற்கும் உள்ள வேறுபாடு அது!. இதுவே தேவருக்கு பிடிக்காத விஷயம். பிறகு ஹீரோ வேறு பிரச்சனை செய்தால்!. ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரை வைத்தே இட்லி அவிப்பதைப் போல மூன்று மாதத்திற்கு ஒரு படம் கொடுத்தவர் தேவர். அவருக்கு ஹீரோவின் நடவடிக்கைகள் மிகவும் கோபமூட்டின.
ஹீரோவிற்கும் தேவரின் கோபம் தெரிய வந்தது. தேவரிடமும் ஹீரோவும் கோபமாக இருக்கிறார் என்று வைத்தனர் சிலர். சில நாட்கள் பொறுமைக் காத்தபின் எந்த மாற்றமும் ஹீரோவிடம் தெரியாமல் போகவே, கடுங்கோபமுடம் ஹீரோவைப் பார்க்க அவரது அறைக்கு தேவர் சென்றார். ஹீரோ அங்கு இல்லை. எனவே அவர் வரும் வரை காத்திருக்க முடிவு செய்து அவரது அறையிலேயே தேவர் காத்திருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து ஹீரோ அறைக்கு வரும் போது, தயாரிப்பாளர் தேவர், தனது அறையில் காத்திருப்பதைப் பார்த்தார். கொஞ்சம், தயங்கிய அவர், சின்ன யோசனைக்குப் பிறகு தன் காலில் அணிந்து இருந்த செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அறையில் உள்ளிருந்து ஹீரோவை கவனித்து கறுவிக்கொண்டிருந்த தேவர், ஹீரோ தன் கையில் செருப்பை எடுத்தவுடன் பழைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆனார். கோபத்தில் அவரது சாண்டோ தேகம் சிலிர்த்து சிவந்தது.
இன்னைக்கு அவனுக்காச்சு! எனக்காச்சு! என்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்த ஹீரோ அறைக்குள் நுழைந்தவுடன் கையில் எடுத்த செருப்புடன் நேராக சின்னப்ப தேவரின் அருகே சென்று, அவரது கையில் தனது செருப்பைக் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்தார். தேவர்ஜீ! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது தவறுதான். அந்தத் தவற்றுக்கு நீங்கள் இந்த செருப்பாலேயே என்னை அடியுங்கள், இனி இன்னொரு முறை நான் இந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்!. என்று ஹிந்தியில் கதறினார். இதைக் கண்டு தேவர் மனம் நெகிழ்ந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
என்னாங்க! இப்படியும் ஒரு தயாரிப்பாளரா? அப்படின்னு நினைக்கிறீங்களா?. இல்லை!..., இதென்ன இப்படி ஒரு டுபாக்கூர் சம்பவத்தை கதை கட்டுறானேன்னு நினைக்கிறீங்களா?.
இது நிஜமாகவே நடந்த உண்மை, நடிகர் சிவகுமார் சொன்ன, உண்மைச் சம்பவம்.
நான் யோசிக்கிறது என்னன்னா அந்த ஹீரோ இராஜேஷ்கன்னாவா? இல்லை தர்மேந்திராவா அப்படிங்கிறதைத்தான்!!!!!!!!!!!!!!!!!
21 Responses to "தேவரின் திருமுகமும், கொடு முகமும்!":
தமிழ்மணத்தில சேர்த்துப்பார்த்தேன். இதுவரைக்கும் சேர்ந்த மாதிரி தெரியவில்லை.
”சேந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் கைகளிலே!”
:)
kalakkal :)
நீங்கள் தேவர் சாதி இன வெறியர் அப்படின்னு பின்னூட்டம் வராமல் இருந்தால் ஆச்சர்யம்தான்.
:-)
rajesh khanna
rajesh kannavaa irunthaalum irukkum
:)))
// குடுகுடுப்பை said...
நீங்கள் தேவர் சாதி இன வெறியர் அப்படின்னு பின்னூட்டம் வராமல் இருந்தால் ஆச்சர்யம்தான்//
ஹஹ்ஹாஹ்ஹா!. தங்கள் பின்னூட்டம் பலிக்காமல் இருக்கக்கடவது!
சோம்பேறி! :) rapp, இருவருக்கும் என் நன்றி!.rapp அவர்களே! நானும் இராஜேஷ் கன்னாவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்!
தகவல் பெட்டகம் இத்தனை நாளா எங்கே போயிருச்சி!
வரும் சனிக்கிழமை மதியம் சந்திப்போம்!
வழக்கம் போல் பராசக்தி அருகில் ஊத்து, பராசக்தியில் கொத்து!
ராஜேஷ் கன்னாவேதான்.
அவரே விரும்பி வந்து தேவரது படத்தில் நடித்தார். இடைப்பட்ட காலத்தில் ராஜேஷ் கன்னாவின் கொட்டத்தை அடக்கவும் செய்தார் தேவர்.
இன்றைய வெட்டிபந்தா மாஸ் ஹீரோக்களின் கொட்டத்தை அடக்க, தேவர் போலொரு தயாரிப்பாளர் தற்போது இருந்தால் நன்றாக இருக்கும்.
தேவரின் குணநலன்கள் வியக்கவைக்கின்றன. நல்ல பகிர்வு
நல்ல பதிவு.
தேவர் "" கோலிவுட்டின் இடிஅமீன்" என்ற என் பதிவை காண
http://mynandavanam.blogspot.com/search/label/NHM
நன்றி நண்பரே...
வால்! மன்னிக்கவும்!. பதில் கமெண்ட் போட கொஞ்சம்(ரொம்ப) லேட் ஆயிடுச்சி!. கண்டிப்பாக சந்திக்கலாம்!
//இன்றைய வெட்டிபந்தா மாஸ் ஹீரோக்களின் கொட்டத்தை அடக்க, தேவர் போலொரு தயாரிப்பாளர் தற்போது இருந்தால் நன்றாக இருக்கும்//
அந்தக் காலத்தில் கூட ஹீரோக்களின் கையில் தான் தமிழ் திரையுலகம் இருந்தது. ஒவ்வொரு ஹீரோவும் தமக்கென தனித்தனி குழுக்களை வைத்துத்தான் இருந்தனர். ஆனால் அவர்களிடம் கொஞ்சம் திறமை இருந்தது. ஆனால் இன்றைய ஹீரோக்கள்??????????
நன்றி! உழவன் அவர்களே!
வண்ணத்துப்பூச்சியாரே!. இந்த இடுகையே ஒரு ரீ ஆக்ஷன் போலத்தான்!.ஆர்வியின் இடுகை,பிறகு உங்களுடைய இடுகை முதலியவைகளைப் பார்த்தப் பின் தான் இதை எழுதத் தோன்றியது!
அவசரம் அழைக்கவும்!
நாளை சேலம் வருகிறேன்!
அதே நம்பர், ஆனால் என்னிடம் உங்க நம்பர் இல்லை!
சுவாரசியமான தகவல்...
los angeles car insurance\\\car insurance california
spam comments varuthu
Post a Comment