மூதறிஞர் இராஜாஜி "புட்டின இல்லு" வில் நல்லதந்தி!

Posted on Wednesday, December 10, 2008 by நல்லதந்தி

நான் பெங்களூர் போகும் போது எல்லாம் ஹொசூரைக் கடக்கும் போது “மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம்” என்று எழுதப் பட்ட பெரிய வளைவைப் 
பார்த்தவுடன் ஒரு முறையாவது நாம் போய் அவர் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.பேருந்தில் இருந்து இறங்கி நகரப்பேருந்திற்க்கு காத்திருந்து (எத்தனை மணிநேரத்துக்கொன்றோ) அதைப்பிடித்து போய்ப் பார்க்க 
வேண்டிய அசெளகர்யத்தை நினைத்தவுடன் அந்த நினைப்பு மாறிவிடும்.

இந்த முறை பெங்களூரு சென்றது டூ வீலரில் என்பதால்,கட்டாயம் தொரப்பள்ளி செல்லவேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. அப்போது எடுத்த சில 
படங்களைப் பதிவிடுகிறேன்.நேரம் கிடைத்தால் இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.

இன்று இராஜாஜி பிறந்த நாள்.

               தொப்பூர் கணவாய் காலை வேளை
                         பாலக்காடு அல்ல! பாலக்கோடு

இராயக்கோட்டை

முன்வாசல்
நுழைந்தவுடன் இராஜாஜி



புகைப்படக் காட்சிகள்



சேலத்தில் அவர் வாழ்ந்த வீடு
வெறும் மூங்கில் தடிகளால் வேயப்பட்ட வீடு
வீட்டுக்கருகில் அழகிய சிறு நதி




12 Responses to "மூதறிஞர் இராஜாஜி "புட்டின இல்லு" வில் நல்லதந்தி!":

g says:

இன்று இராஜாஜி பிறந்த நாள்.

g says:

இன்று இராஜாஜி பிறந்த நாள்.

ரவி says:

ச்சே...அபச்சாரம் அபச்சாரம்..குலக்கல்வி முறை மட்டும் கொண்டுவந்திருந்தா இன்னைக்கு இந்த சூத்திரவா எல்லாம் கம்பூட்டர தட்டிண்டு உக்காந்திருப்பாளா ?

நல்லதந்தி says:

// செந்தழல் ரவி said...
ச்சே...அபச்சாரம் அபச்சாரம்..குலக்கல்வி முறை மட்டும் கொண்டுவந்திருந்தா இன்னைக்கு இந்த சூத்திரவா எல்லாம் கம்பூட்டர தட்டிண்டு உக்காந்திருப்பாளா ?//

குலக்கல்வி முறை அவர் கொண்டு வந்த நோக்கம் வேறு என்றே நினைக்கிறேன்.குழ்ந்தைகளின் படிப்புக்கான நேரம் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் போதும் என்று அவர் கருதியிருக்கலாம்.இதனால் கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்காகும் என்று நினைத்திருக்கலாம்.
அதிக குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நோக்கிலும், அந்த நேரத்தில் குழந்தைகள் பொழுதை வீணாய் கழிக்காமல், ஏதாவது ஒரு கைத் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் அச்சிறுக் குழந்தைகள் வேறு எங்கு போய் கற்க முடியும்.அதனால் தன் வீட்டில் தந்தை செய்யும் குடும்பத்தொழிலைக் கற்பது நலம் என்று கருதியிருக்கலாம்.இவை தான் குலக்கல்வித் திட்டத்தின் முக்கிய காரணங்கள்.அதாவது அனைவருக்கும் கல்வி,தொழில் தெரியாத அடுத்த தலைமுறை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய உயரிய நோக்கம்.

ஆனால் அந்த நேரத்தில் இருந்த அரசியல் நிலவரங்களுக்காக காமராஜ் இதை எதிர்த்தார்.சொல்லப் போனால சுயநலத்திற்காக எதிர்த்தார்.

1952-ல் முதல் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் சென்னை மாகாணத்தில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஜஸ்டிஸ்கட்சியினரும் சுமாரான இடங்களைக் கைப்பற்றி இருந்தனர்.ஆட்சியமைக்க இக்கட்டன சூழ்நிலை இருந்த நிலையில் அன்றைய பரந்த சென்னை மாகாணம் முழுவதும் புகழ் பெற்ற ,மக்களால் அறியப் பெற்ற தலைவர் தேவைப் பட்டார்.அன்றைய சென்னை மாகாணம் தமிழ்நாடு முழுமையாகவும்,கேரளா,கர்நாடகா,அந்திரா போன்ற மாநிலங்களின் பல பகுதிகளையும் கொண்டது.காமராஜரைப் பொறுத்தவரை தமிழகப் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றவராக இருந்தாலும் மற்ற பகுதிகளில் அவரை யார் என்று தெரியாது.எனவே இராஜாஜியை முதலமைச்சராக செய்தால் ஒழிய சிக்கல் தீராது என்ற நிலையில் இன்றைய நிலைமையில் ஜனாதிபதியாக இருந்தவரைப் முதலமைச்சர் பதவியில் அமரச்செய்வது போல,1952-ல் குடியரசாகும் முன் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த திரு இராஜாஜியை நேரு வலியுறுத்தி முதலமைச்சராகப் பதவி ஏற்கச் செய்தார்.இதனால் காமராஜ் சோர்வடைந்தார்.

பிறகு 1954-ல் சென்னை மாகணம் மொழிவாரியாகப் பிரிக்கப் பட்டது.ஆந்திரா முதல் மொழிவழி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.இவ்வாறே மற்ற பிரதேசங்களும் பிரிக்கப் பட்டன.இதனால் தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்றிருந்த காமராஜர் வலுவடைந்தார்.
இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா!.காமராஜர் இராஜாஜியைக் கீழேத் தள்ள காத்திருந்தார்.அதற்க்குத் தோதாக இந்த குலக்கல்வித் திட்டதைப் பயன் படுத்திக் கொண்டார்.குலக்கல்வித் திட்ட்த்தைப் பற்றி அவதூறு பிரச்சாரங்கள் நடை பெற்றன. தி.மு.க வும் இதில் ஈடு பட்டது.இதில் குளிர் காய்ந்த காமராஜ்,இராஜாஜி பதவி விலகியவுடன், முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இதுதான் குலக்கல்வித் திட்டம் அவதூறு பிரச்சாரத்தில் மாட்டிய கதை.இராஜாஜி பிரமணராக இல்லாமல் இருந்தால் இதை எல்லாம் எப்போதோ மக்கள் மறந்து இருப்பார்கள்.அவர் பிராமணராக இருந்ததால் பிரமண எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வந்த,வருகின்ற இயக்கங்கள்.பிரமணர்களை திட்ட இதையும் ஒரு சாக்காகப் பயன்படுத்தி வருகின்றன்.

மூச்சு வாங்குது!.அதுமட்டுமில்லாமல் நீங்கள் போற்றி வணங்குகின்ற பெரியாரிரை அரசியலுக்கு இழுத்து வந்தவேரே இராஜாஜிதான்.பெரியாரே நான் காங்கிரஸில் இருந்து வெளியே வந்து இருக்காவிட்டால் இராஜாஜியின் தொண்டனாகவே காலத்தைக் கழித்திருப்பேன் என்றாரே.அதற்காகவே நீங்களும் இராஜாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடலாம். :)

Anonymous says:

i don't believe Rajaji himself had any sinister motive behind the kulakalvi thittam. However, one has to agree that it'd have retained the brahmin dominance on govt jobs. Again, i am not saying the way reservations (had been)are being implemented is the right way either. it just all have gotten so god damn political, no one is even ready to sit down and think of different options anymore.

RAMASUBRAMANIA SHARMA says:

EXCELLENT TRIBUTE TO THE GREAT POLITICAL GENIUS "CHAKRAVATHI RAJAGOPALACHARI".....LET US REMEBER THE GREAT & INDIA's FIRST "GOVERNER GENERAL" AFTER INDIAN INDEPENDENCE AT THIS MOMENT...COMMENTS APART

RAMASUBRAMANIA SHARMA says:

YES PLEASE

RAMASUBRAMANIA SHARMA says:

YES PLEASE

Anonymous says:

அற்புதமான பதிவு.என்பது வழக்கமான சொற்றொடர்.உங்கள் பதிவிலும் மேலானது நீங்கள் செந்தழல் ரவிக்குச் சொன்ன பதில்!.இன்னும் ராஜாஜியைப் பற்றி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

நல்லதந்தி says:

//அற்புதமான பதிவு.என்பது வழக்கமான சொற்றொடர்.உங்கள் பதிவிலும் மேலானது நீங்கள் செந்தழல் ரவிக்குச் சொன்ன பதில்!.இன்னும் ராஜாஜியைப் பற்றி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.//

நன்றி!.முயற்சிக்கிறேன்!

Anonymous says:

padangal super. :)

Anonymous says:

//குலக்கல்வி முறை அவர் கொண்டு வந்த நோக்கம் வேறு என்றே நினைக்கிறேன்.குழ்ந்தைகளின் படிப்புக்கான நேரம் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் போதும் என்று அவர் கருதியிருக்கலாம்.//

இதற்கு என்ன ஆதாரம்?
”அவர் அப்படி கருதியிருக்கலாம்”னு நீங்க சொல்றது ஆதாரம் இல்லை :)

அப்படியே அவர் நினைத்திருந்தாலும், அவர் எண்ணம் சரியா? இல்லை சத்துணவு கொடுத்து
நிறைய குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்த காமராஜ்/எம்ஜியார் செய்தது Smart move ஆ?


//இதனால் கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்காகும் என்று நினைத்திருக்கலாம்.//

இதை எப்படி சொல்கிறீர்கள் ??
ஒரு குழந்தை பள்ளிக்கு செல்கிறதா இல்லையா என்பது அதன் பெற்றோரின் பொருளாதார நிலைதான்
தீர்மானிக்குமே தவிர, வகுப்புகள் எவ்வளவு நேரம் நடக்கிறது என்பதால் அல்ல.


உங்களுடைய “அவர் நினைத்திருக்கலாம்/கருதியிருக்கலாம்”களை விலக்கிவிட்டு பார்த்தால், சில விசயங்கள் தெரியும்.
திட்டத்தின் பெயரே “குல”க்கல்வி திட்டம், அதாவது பரம்பரை பரம்பரையாக ஜாதியின் அடிப்படையில் செய்து வந்த தொழில் முறை விட்டுப்போகக்கூடாது என்ற மறைமுக எண்ணத்தோடு(rather Sinister ???) கொண்டு வரப்பட்டது. ஆனால் அப்படி வெளியே சொல்ல முடியாதே, அதுதான் ”இராஜாஜி”


//நீங்கள் போற்றி வணங்குகின்ற பெரியாரிரை அரசியலுக்கு இழுத்து வந்தவேரே இராஜாஜிதான்.பெரியாரே நான் காங்கிரஸில் இருந்து வெளியே வந்து இருக்காவிட்டால் இராஜாஜியின் தொண்டனாகவே காலத்தைக் கழித்திருப்பேன் என்றாரே.அதற்காகவே நீங்களும் இராஜாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடலாம். //

இராஜாஜி அரசியலுக்கு அழைத்து வந்தவர்தானே பெரியார் என்று, நீங்கள் பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடுங்கள், அதன் பிறகு அவர்களும் இராஜாஜி பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.