பத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகைப்படம்!

Posted on Tuesday, December 9, 2008 by நல்லதந்தி




எழுத்தாளர் புதுமைப்பித்தனுடன் இருந்த போது நடந்த பல ரசமான நிகழ்ச்சிகளை நடிகர் சந்திரபாபு கூறினார்.அவைகளில் இதுவும் ஒன்று.

புதுமைப்பித்தன் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.இருமல் வியாதியால் பீடிக்கப் பட்டிருந்த எழுத்தாளரும்,சந்திரபாபுவும் டாக்டர் வீட்டிலிருந்து திரும்பி வந்தார்கள்.

எழுத்தாளரின் வரவிற்காக ஒரு பத்திரிகாசிரியர் அவர் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார்.அவர் ஒரு இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர்.

“அட்டை படமாகப் வெளியிட உங்கள் போட்டோ ஒன்று தேவை” என்று புதுமைப் பித்தனிடம் அவர் கேட்டார்.

புதுமைப்பித்தன் தமக்கே உரித்தான வரட்டுச் சிரிப்பை சிரித்துவிட்டு “என்னிடம் இப்போது ஒரே ஒரு போட்டோதான் இருக்கிறது.அதுவும் உங்களுக்குப் பயன்படாது!” என்றார்.

வந்தவர் விடுவதாக இல்லை. “பரவாயில்லை.அதையே கொடுங்கள்.நான் எதாவது செய்து சரிப்படுத்திக் கொள்கிறேன்.” என்றார்.

புதுமைப்பித்தன் மறுக்கவே வந்தவர் தருமாறு வற்புறித்தினார்.

“சரி, சொன்னால் கேட்க மாட்டீர்கள்.” என்றபடி ஒரு பெரிய கவரைப் பத்திரிகாசிரியரிடம் கொடுத்தார்.அதனுள் இருந்ததை வெளியே எடுத்துப் பார்த்தார் வந்தவர்.உடனே திரு திருவென்று விழித்தார்.

அது,புதுமைப் பித்தனின் நுரையீரலின் எக்ஸ்ரே படம்!

10 Responses to "பத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகைப்படம்!":

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

இந்தச் செய்தையை எங்கிருந்து எடுத்தீர்கள்...

நீங்கள் புதுமைப்பித்தன் படித்திருக்கிறீர்களா... தமிழில் மிகமுக்கியமான சிறுகதை ஆசிரியர். சிறுவயதிலேயே இறந்துபோனது சோகம் :(

நல்லதந்தி says:

பழைய புத்தகத்தில் இருந்து எடுத்த செய்திதான்.1948-ல் புதுமைப் பித்தன் இறந்தவுடன் வெளிவந்த,அவரது வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை ஒன்று இருக்கிறது.வெளியிடட்டுமா?

வால்பையன் says:

நீங்கள் ஒரு வாசிப்பாலர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
என்னை போன்ற சிறுவர்களுக்கு உங்கள் காலத்திய செய்திகளை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும்

நல்லதந்தி says:

// வால்பையன் said...
நீங்கள் ஒரு வாசிப்பாலர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
என்னை போன்ற சிறுவர்களுக்கு(?????) உங்கள் காலத்திய செய்திகளை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும்//

கண்டிப்பாக நன்றாகத்தான் இருக்கும்.முயற்சிக்கிறேன்.அப்புறம் நானும் உங்களைப் போன்று சிறுவன் தான்,என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். :))

Anonymous says:

சுவாரசியமாக இருக்கின்றது.தொடரவும்

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

/அவரது வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை ஒன்று இருக்கிறது.வெளியிடட்டுமா?/

தயவுசெய்து வெளியிடுங்கள்.

ஆர். முத்துக்குமார் says:

கிழக்கு பதிப்பகம் புதுமைப்பித்தனின் கதைகளை ஒலிப்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது. அந்த ஒலித்தகட்டின் முகப்பில் புதுமைப்பித்தனின் ஓவியம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாருங்கள். பிறகு சொல்லுங்கள்

கிரி says:

//அது,புதுமைப் பித்தனின் நுரையீரலின் எக்ஸ்ரே படம்!//

:=))

Anonymous says:

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
/அவரது வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை ஒன்று இருக்கிறது.வெளியிடட்டுமா?/

தயவுசெய்து வெளியிடுங்கள்.//

வழி மொழிகிறேன்

இலவசக்கொத்தனார் says:

//அப்புறம் நானும் உங்களைப் போன்று சிறுவன் தான்,என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். //

:))