பி.வி.என். புரொடெக்ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தார் குலதெய்வம் ராஜகோபால்.வந்த வேலை முடிந்தபின் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.நடுவில் தாயாரிப்பாளர் வள்ளிநாயகம்”திரு என்.எஸ்.கிருஷ்ணனுடன் நீங்கள் வாழ்ந்த நாட்கள் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.
குலதெய்வம் ராஜகோபால் சொன்ன பல ரசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.
கலைவாணரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒருத்தி அங்கு வந்தாள்.”மவராசா! நிறைமாதக் கர்பிணி ஆஸ்பத்திரிக்கு போகணும் ,உதவுங்கள் “என்று கேட்டாள்.
கலைவாணரோ அவளை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தார்.அவள் துடித்த துடிப்பையும்,கிருஷ்ணன் அவர்களின் அலட்சியத்தையும் கண்டு எனக்குக் கோபம் கோபமாக வந்தது.கஷ்டம் என்று வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் கலைவாணர் இந்தக் கர்பிணி விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? என்று நான் அவசரப் பட்டேன்.
அவரோ சிறிது கூடப் பதட்டம் காட்டவில்லை.நான்கணா நாணயம் ஒன்றை ஒரு பக்கம் வைத்தார்.ஐந்து ரூபாய் நோட்டென்றை மற்றொரு பக்கம் வைத்தார். ”இந்தாம்மா,நீ நிஜமாகவே கர்பிணியாக இருந்தா இந்த நாலணாவை எடுத்துக்க,வேஷம் போடறவளா இருந்தா ஐந்து ரூபாயை எடுத்துக்க” என்று சொன்னார்.
அந்தப் பெண்ணோ,”சாமி,நீங்க இப்படிச் சோதிக்கலாமுங்களா?” என்று சொன்னாளேத் தவிர எதையும் தொடவில்லை.அவளது பார்வை மட்டும் ஐந்து ரூபாய் நோட்டின் மேலேயே பதிந்திருந்தது.
கொஞ்ச நேரத்துக் பின் தான் எனக்கு எல்லாமே விளங்கியது.அவள் இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த கந்தைகளை ஒவ்வொன்றாகக் களைந்தப் பிறகுதான் அவள் ஏமாற்று வேஷம் போட்டு இருக்கிறாள் என்பது தெரிந்தது.
கலைவாணர் அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து”இன்றோடு இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடு “,என்று சொல்லி அனுப்பினார்.
நான் என்னுடைய அவசர முடிவுக்காக வருந்தினாலும்,”அந்த ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏன் ஐந்து ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கோபமாய் கேட்டேன்.
“அட அசட்டுப் பயலே! நான் ஏமாந்துபோய்க் கொடுத்திருந்தால் நீ கோபிக்கலாம்.நான் அவள் “நடிப்பு”க்காக அல்லவா சன்மானம் கொடுத்தேன் என்றார் என்.எஸ்.கே.
9 Responses to "நடிப்பிற்காக சன்மானம் கொடுத்த என்.எஸ்.கே!":
நல்லா இருக்கு நல்ல(தம்பி)தந்தி!
அய்யா போட்ட கமெண்ட் தூக்க (அழிக்க)வழி இருக்கா? எப்படி?(என்
வலையில் கமெண்ட் மாடுரேஷன்
கிடையாது.கமெண்ட் மாடுரேஷன் இல்லாமல் வந்து விழும் கமெண்டுகளை எப்படி அழிப்பது?
“அட அசட்டுப் பயலே! நான் ஏமாந்துபோய்க் கொடுத்திருந்தால் நீ கோபிக்கலாம்.நான் அவள் “நடிப்பு”க்காக அல்லவா சன்மானம் கொடுத்தேன் என்றார் என்.எஸ்.கே.
மணுஷன்......
//அய்யா போட்ட கமெண்ட் தூக்க (அழிக்க)வழி இருக்கா? எப்படி?(என்
வலையில் கமெண்ட் மாடுரேஷன்
கிடையாது.கமெண்ட் மாடுரேஷன் இல்லாமல் வந்து விழும் கமெண்டுகளை எப்படி அழிப்பது?//
நிஜமாத்தான் கேட்கறீங்களா? ரவிசங்கர்.உங்க பிளாக்கர் அக்கௌண்டில் நுழையுங்கள்.பின் உங்கள் வலைப்பூவிற்க்குள் வந்தால் இடப்பட்டு இருக்கும் கமெண்ட்களுக்கு முன் ஒரு குப்பைத் தொட்டிப் படம் இருக்கும்.நீங்கள் அழிக்க நினைக்கும் கமெண்டின் முன் உள்ள குப்பைத் தொட்டியை அழுத்தினால் அழிக்கவா?என்று கேட்க்கும் சரியென்று சொன்னால் கமெண்ட் போயே போச்சு! :)
//பி.வி.என். புரொடெக்ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு//
நிகழ்காலத்தில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது,எதாவது காரணம் உண்டா?
//“அட அசட்டுப் பயலே! நான் ஏமாந்துபோய்க் கொடுத்திருந்தால் நீ கோபிக்கலாம்.நான் அவள் “நடிப்பு”க்காக அல்லவா சன்மானம் கொடுத்தேன் என்றார் என்.எஸ்.கே.//
அதே போல் தான் நாம் இன்று அரசியல்வா(ந்)திகளுக்கு கோடி கோடியாய் சன்மானம் தருகிறோமா?
// வால்பையன்
December 6, 2008 5:56 PM
//பி.வி.என். புரொடெக்ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு//
நிகழ்காலத்தில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது,எதாவது காரணம் உண்டா?//
வாங்க வால்.கல்யாணம் இனிதே முடிந்ததா?.
சனிக்கிழமை கம்ப்யூட்டர் பக்கம் வரமாட்டீர்களே.வேலை அதிகமா?.அப்புறம் என்ன கேட்டீங்க.”நிகழ்காலத்தில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது,எதாவது காரணம் உண்டா?”.சத்தியமா இருக்குங்க உள்ளதை உள்ளபடி எழுதினால் இந்த மாதிரிதான் இருக்கும்.:))
//அய்யா போட்ட கமெண்ட் தூக்க (அழிக்க)வழி இருக்கா?//
ரொம்ப நன்றி நல்ல தந்தி. இவ்வளவு
நாள் இது தெரியாமா “settings" பார்த்து “திரு திரு”வென விழுச்சுட்டு
அங்கேயே சுத்திட்டிருந்தேன்.
(என் முகம் அசடு வழிகிறது)
//ரொம்ப நன்றி நல்ல தந்தி. இவ்வளவு
நாள் இது தெரியாமா “settings" பார்த்து “திரு திரு”வென விழுச்சுட்டு
அங்கேயே சுத்திட்டிருந்தேன்.//
:)
good post.
Post a Comment