பிராமணர்கள் கோழைகள் இல்லை!

Posted on Sunday, December 14, 2008 by நல்லதந்தி




ஜெமினிகணேசனைப் பொறுத்த வரையில் அவர் “சாம்பார்” என்ற ஒருஅடை மொழி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.அது அவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் எனபதால் ,அவ்ரைக் கீழ்மைப் படுத்த இருக்கலாம்.ஆனால் சாம்பார் என்ற பெயர் வந்த காரணம் வேறு என்று நான் இதே இணையத்தில் படித்திருக்கிறேன்.அது ஏதோ ஒரு திரைப் படத்தின் மூலமாக வந்தது என அறிகிறேன்.ஆனால் அது கோழை என்று அடைமொழியாகி அவர் சார்ந்த வகுப்பை கிண்டலடிக்க தி.க.,திமுக, கும்பல்களுக்கு உதவின.நிஜத்தில் அவர் அன்றைய காலத்தில் இருந்த மற்ற நாயக நடிகர்களை விட அதி தைரியசாலி என்பதே உண்மை.

விஜயா-வாஹினி புரெடெக்‌ஷன் சார்பில் ,அவர்கள் தயாரித்த இரு மொழி படத்தில் ஹீரோ மாடியில் இருந்து குதிக்கும் காட்சி ஒன்றுண்டு.அந்தப் படத்தில் தமிழில் நாயகனாக நடித்த ஜெமினி கணேசன்.இருபதடி உயரத்தில் இருந்து அநாவசியமாகக் குதித்தார்.அதன் தெலுங்குப் பதிப்பில் நடித்த என்.டி.ராமராவ் சிறிது தயக்கப் படவே அவருக்குப் பதிலாக ஜெமினி கணேசன் மாடியில் இருந்து குதித்து டூப்பாக நடித்தார்.ஆக திரையுலகில் டூப்பாக ஒரு பிரபநடிகருக்கு மற்றொரு பிரபலம் நடித்தது.அதுவே முதல் முறை.ஒருவேளை கடைசி முறையாகவும் இருக்கலாம்.அடுத்த மேட்டர்.........................

ஜூபிடர் பிக்சர்ஸின் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள’ படத்திற்கென ஒரு போர்காட்சி நெப்டியூனில் படமாகி வந்தது.அப்பொழுது, நட்சத்திரங்களில் மிகவும் அதிக நெஞ்சுத் துணிவுள்ள பேர்வழி யார் என்பதைப் பற்றி கேள்வி வந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகரைச் சொன்னார்கள்.அந்த சமயம் அங்கே இருந்த ஒர் இளம் நாடிகர் புன் சிரிப்புடன்,” நான் கூறட்டுமா?,அந்த துணிச்சல் நடிகர் யாறென்று!” என்று கூறி விட்டு “ஜெமினி கணெசனின் துணிச்சல் யாருக்கும் வராது,” என்று சொல்லி பின் கண்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சியை விவரித்தார்.

புதுக்கோட்டை ராஜவம்சத்தைச் சேர்ந்த நடுத்துரை என்பவர் அப்போது தங்கியிருந்தார்.அவர் ஜெமினிகணேசனின் நெருங்கிய நண்பர்.தமது நண்பரைப் பார்க்க போயிருந்தார். நடுத்துரை பேச்சோடு பேச்சாக, ” நீங்கள் சினிமாவில் பல துணிகரச் செயல்கள் செய்வதல்லாம் வெறும் நடிப்புத்தானே?,” என்று கேட்டார்.

“நிஜமாய் எனக்கு மனோ தைரியம் உண்டா என்று பார்க்க ஒரு பரிட்சை வேண்டுமானால் வையுங்களேன்” என்றார் ஜெமினி கணேசன்.நடுத்துரை உடனடியாக ஒரு பரிட்சை வைத்து விட்டார்.

ஜெமினிகணேசனை உட்கார வைத்துஅவர் வாயில் ஒரு சிகரெட்டை வைத்தார் நடுத்துரை.நண்பர் நடுத்துரை குறி பார்த்து சுடுவதில் சூரர்.தொலைவில் பக்கவாட்டாக அமர்ந்திருந்த ஜெமினி கணெசனின் உதட்டிலிருந்த சிகரெட்டைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்தினார்.தோட்டா தன்னை நோக்கி பறந்து வரும் வேளையிலும் கொஞ்சம் கூட ஆடாமலும்,அசையாமலும் இருந்த ஜெமினியியின் துணிச்சலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.

28 Responses to "பிராமணர்கள் கோழைகள் இல்லை!":

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

//தோட்டா தன்னை நோக்கி பறந்து வரும் வேளையிலும் கொஞ்சம் கூட ஆடாமலும்,அசையாமலும் இருந்த ஜெமினியியின் துணிச்சலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.//

மெய்யாலுமா ?

Anonymous says:

Brahmins need not prove anything to anyone. The title is misleading. Secondly, let us rate Gemini Ganesan for his on-screen acting, not for his caste.

Anonymous says:

அடேங்கப்பா :)

வால்பையன் says:

பிராமணம்,பார்பனியம் எதற்கு,

அதை தவிர்த்து ஒரு மனிதனாக ஒரு நடிகனாக ஜெமினியை பாராட்டுகிறேன்.

சாதியை விட்டு வெளியே வாங்க.
வேறு உலகம் காத்திருக்கு

Anonymous says:

Saambaar (gemini) Kozhai (Coward )illenna , Brahmins ellame Kolzhai illannu (unga title thaan) sollreenga?.

Appo Saambaarukku more than oru wife undu. So, Ellaa Brahmnaragalukku more than one wife-nnu sollalaamaa?.

Vengaayaam.

Anonymous says:

To author,

By titling and linking any article to a particular caste, more trouble and unnecessary talks would be invited.

It would be better to avoid caste names and the resultant hatred cropping on one another.

Lets try and share love and affection towards one another and look beyond caste and religion.

veLLapoondu

நல்லதந்தி says:

//மெய்யாலுமா //
பழைய பத்திரிக்கை செய்தி(ஆண்டு 1959) ஆகவே உண்மையாகவே இருக்கலாம்.

நல்லதந்தி says:

//
செந்தழல் ரவி said...
:))))))))))?//

:))

நல்லதந்தி says:

// வால்பையன் said...
பிராமணம்,பார்பனியம் எதற்கு,

அதை தவிர்த்து ஒரு மனிதனாக ஒரு நடிகனாக ஜெமினியை பாராட்டுகிறேன்.

சாதியை விட்டு வெளியே வாங்க.
வேறு உலகம் காத்திருக்கு//

வாங்க,குரு, நான் சாதியைப் பார்பவனல்லன் என்பது உங்களுக்குத் தெரியாததா?.இந்த த்லைப்புக்கு காரணமும்,இது தமிழ்மணத்தில் ஹிட்டானதும் இன்றைய சூழ்நிலைதான் என்பதும் உங்களுக்குப் புரியாததா! :)

நல்லதந்தி says:

மேற்கண்ட பதில்கள்தான் அனானி நண்பர்களுக்கும்.

Hariharan # 03985177737685368452 says:

ஜெமினி தன் வீரத்தை வெளிஉலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட எதுக்கு தோட்டாவை சந்திக்கணும்??

பேசாம ரயில் கண்டிப்பா வராதுன்னு தெரிஞ்ச டால்மியாபுர தண்டவாளத்தில் தலையை வைச்சு மறிச்சிருந்தா வராத ரயிலை மறிச்ச வீரத்துக்காக நவீன ராஜராஜசோழன் வழிவந்த தமிழீன தலைவர் என்று சுருக்க வீராதிவீரர் ஆகியிருக்கலாம்.

வாழும்போதே வீரம் வெரசா வெளிப்பட பெட்டர்லக் இன் நெக்ஸ்ட் ஜென்மம் ஜெமினி!!

Anonymous says:

இது துணிச்சல் அல்ல, சுத்தப் பைத்தியகாரத்தனம்.
தன்னம்பிக்கையும் துணிச்சலும் தனக்கு இருப்பது தப்பில்லை.
அடுத்தவன் சுட அவனை நம்பி ஆடாமல் இருப்பதற்குப் பெயர் சுத்தப் பைத்தியகாரத்தனம்.

Tech Shankar says:

ஜெம்னி கணேசனும், எனது தந்தையாரும்(மறைவு - 29/12/2005) புதுகை நண்பர்கள்.

ஜெமினியைப் பற்றி எனது தந்தையார் கூறிய தகவல்களை இங்கே நினைவு கூற வைத்துவிட்டீர்கள். நன்றி

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

Anonymous says:

nallaa thamaasu pannurikkal hahahaha. paappaanukku veeramaa? thunisalaa? kaamady kimady pannalaiye?????????

dravidan.

RAMASUBRAMANIA SHARMA says:

ACTOR "GEMINI GANESAN" IS NOT ONLY A PIUS PERSONALITY BUT ALSO A "COURAGEOUS HERO", WHICH WE UNDERSTAND THRU THIS ARTICLE. GOOD. LET US IGNORE THE TITLE, SINCE I HOPE IT WILL NOT BE REPEATED IN FUTURE.HATS OFF TO Mr "NALLA THANTHI", WHO HAS PASSED ON SOME VALUABLE INFORMATION FOR "GEMINI MAMA's FAN'S".THANKS.KEPP SENDING SUCH ARTICLE, CAREFULLY EDITING THE CASTE BARRIER.

RAMASUBRAMANIA SHARMA says:

WELOCOME

கிரி says:

ஆமா! பழைய செய்திகளா போடுறீங்க எங்கே இருந்து பிடிக்கறீங்க :-)

Unknown says:

நான் ரொம்ப வருடங்களுக்கு முன் படித்தது. அந்த காலத்தில் ஹை கோர்ட்டில் வேலை செய்யும் குறிப்பாக ஜட்ஜுகள் (முக்கால் வாசி பிராமிணர்கள்)நெறைய பேர் செங்கல்பட்டிலிருந்து போர்ட் stationil இறங்கி ஹை கோர்ட் சேம்பர் போவார்கள்.

அந்த ரயிலுக்கு சேம்பர் ஸ்பெஷல்(11 மணி) என்று பெயர். அதில் வருபவர்கள்(பிராமிணர்கள்)சாம்பார் ஆனார்கள். வழக்கமாக பிராமிணர்களை "தயிர் சாதம்" என்றுதான் கிண்டல் செய்வார்கள்.

Anonymous says:

:-))))))))

Anonymous says:

//பிராமணர்கள் கோழைகள் இல்லை! //

ஆமாம், காந்தியைச் சுட்ட கோட்சே கூட பிரம்மனாள் தான்.

Anonymous says:

// Anonymous said...
//பிராமணர்கள் கோழைகள் இல்லை! //

ஆமாம், காந்தியைச் சுட்ட கோட்சே கூட பிரம்மனாள் தான்.//

அமடா! அம்பி.நேருவைப் பெத்ததும்,இந்திராவைப் பெத்த்தும் இந்த படுபாதகர்கள்ளோனோ!.நீ ஒன்னு செய்யடா பேசாம காங்ரஸை விட்டு விலகடோ அம்பி, அப்புறம் அல்லாம் செரியாயிட்டு போகுமல்லே!

Anonymous says:

why do people still use their caste names in India. Even in 21st century India caste names are still alive and kicking.I see iyer,iyankar.reddy.menon,pillai,sharma etc used by lot of people. It is sad the young generation are also caste conscious like their forefathers.caste system is the most cruellest system which denies a person their basic human right from the birth.unless India get rid of this system it can never become a developed ,progressive country.
for a start stop using caste identification in your names.
encourage mixed mariage and improve the financial situation of the people from lower caste.
although western countris has class system,a person from lower socio economic group can improve their position by hard work and education and change their class into middle class or upper class. but in India if you born into a lower caste you can never change it.

butterfly Surya says:

ருசிகர தகவல்கள்

நன்றி..

வாழ்த்துக்கள்

Anonymous says:

Dear Sir!

A hero is an investment for the producer. The producer wants to get rich returns from the investment.

A hero, who is concerned about the expectations of a producer, wont do all such acts jus to show off that he is courageous.

A hero may, indeed, be a courageou person; but the film is not the place to show off his courage. He can hang on to the rope from a helicopter and rescus people who are marooned in a flood; enter a house on fire and rescue people from dying. These are a few examples for a man who is really courageous.

In film, if he shuns the so-called 'dupe' or 'duplicate' (mostly a stuntman, who is an expert in daredevilry), then, the hero may hurt himself and the shooting will be cancelled, putting the producer to economic strains. If the injury is grievous, the hero has to spend his time in hospital for many weeks; which will make the producer go broke.

In a case involving the malayalam actor Jayan (who was no. 1 action hero during the 80s), he insisted that he would act out the scene himself. The scene involved hanging on a rope from a flying helicopter. He did all shots, but in the last one, he slipped and fell down. He died.

The kumudan magazine published his acts frame by frame and showed he how fell.

Needless to say, Jayan caused great burden on the producer by his foolish act (done just to prove he was a courageous person). He also made his wife a widown and his children fatherless.

The actors called 'dupes' are paid. They practice well and become experts. If they die, the producer give solatium to the bereaved families.

If an actor plays their part also, he make them unemployed.

Jemini had not taken into consideration all the negative consequences of his act. He was so selfish and wanted only his blind courage to the people.

In short, what he did was not courage for other actors to emulate; but sheer foolhardy acts!

☀நான் ஆதவன்☀ says:

நல்ல தகவல் நல்லதந்தி..

ஆனா சர்ச்சை மிகுந்த தலைப்பு :-)

வாக்காளன் says:

ஜெமினி, சாம்பார், பார்பனர் என்று ஏதோ வார்த்தை விளையாட்டு நடத்தி, இவரே ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு சாம்பார் என பெயரிட்டு .. சாம்பார் என்றால் தைரியம் இல்லதாவன் என்று ஒரு அர்த்தம் கொடுத்துள்ளாட் நல்லதந்தி.. அதெப்படி இவர் சாம்பார் என்றால் கோழை என்று முடிவு செய்தார்? ஏதோ ஒரு பரபரப்புக்கும்,வேறு நோக்கிலும் தன் வசதிக்கு எழுதியுள்ளார்.

உண்மையில் ரவிஷங்கர் சொன்னது போல, சாம்பர் என்பது அந்த காலத்தில் "செங்கல்பட்டு - சென்னை' மார்க்கம் காலையில் வரும் ஒரு ரயிலின் பெயர்..

சேம்பர் செல்லும் பல வக்கீல்கள், நீதிபதிகள் அந்த ரயிலில் வருவார்கள்.. சேம்பர் என்பது மருவி சாம்பார் ஆனது. ஜெமினியும் அந்த ரயிலில் ஒரு ரெகுலர் பயனி.. பின்னாளில் அவர் பிரபலமானது, அந்த பெயரும் அவரோடு இனைந்தது..

எலக்ட்ரிக் ட்ரெயின் வந்த பின்பும் 1990களில் ஆரம்பத்தில் கூட அந்த பாசஞ்சர் ரெயில் இருந்தது.. தாம்பரத்திற்கு 9.20 மனிக்கு வரும்.. பின்பு அந்த ரெயில் நிறுத்தப்பட்டுவிட்டது.

1990 களில் நான் பள்ளிக்கு செங்கையில் இருந்து தாம்பரத்து இந்த வண்டியில் தான் வருவேன்.. வயது முதிர்ந்த பயனிகள் சொல்ல இந்த செய்தியை கேட்டுள்ளேன்..

இது தான் சாம்பாருக்கு பெயர்க்காரணம்.. இது தெரியாம ஒரு பதிவு போட்டு அதுக்கு விளக்கம் வேற..

Anonymous says:

//பிராமணர்கள் கோழைகள் இல்லை! //

இராணுவத்தில் இந்தியாவுக்காக உயிர்விட்ட பார்பனர் லிஸ்ட் கொடுங்கோ

BalHanuman says:

Dear நல்லதந்தி,

Greetings.

Excellent article. Thanks for sharing.

I've re-published this in my blog:
http://BalHanuman.wordpress.com

Thanks,
Srinivasan