குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?_2

Posted on Thursday, December 4, 2008 by நல்லதந்தி

இது ஏற்கனவே போட்ட பதிவுதான்.ஆனால் மீள் பதிவல்ல.வழக்கம் போல் காப்பி பதிவு.இப்போ மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு இதைப் போடணும்னு தோணிச்சு.செப்டம்பரில் எழுதியது 
இந்த கட்டுரையின் முடிவில் ”அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம் அப்படின்னு எழுதியிருந்தேன்.யாரும் தேடிப் படிக்கப் போறதில்லை.அதனால் நமக்கு நாமே திட்டத்தின் படி நானே திரும்பவும் போட்டு விட்டேன்.

றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.


ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.


வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.


வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.


வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.


வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.


வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.


இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.


பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.

5 Responses to "குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?_2":

வால்பையன் says:

//அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.//

இந்த கட்டுரையின் படி குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் தான் குண்டு வெடிக்கிறது என்பது போல் இருக்கிறது.
ப.ஜா.க ஆட்சியில் பொக்ரானில் பெரிய குண்டாக வெடித்தாரே அதை ஏன் சொல்லவில்லை

ஹீ ஹீ ஹீ

Bleachingpowder says:

NDTV,CNN-IBM,TIMES NOW, HEADLINES TODAY சேனல்கள் எல்லாம் இனி குண்டுவெடிப்பு ஸ்பெசல்னு தனி சேனலே தொடங்கிடுவாங்க போல இருக்கு.

அப்புறம் நம்ம மத்திய மாநில அரசுகள், குண்டு வெடிப்பின் போது அரசியல்வாதிகள் வெளியிட வேண்டிய அறிக்கையை ஒரு டெம்ளேட் மாதிரி கொடுத்தால், அவரவர் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி செலக்ட் செய்து அறிக்கையை வெளியிடலாம்.

உதா.

இது ஒரு காட்டுமிராண்டிதனாம தாக்குதல்.

மணித குலத்திற்கு எதிரான செயல்.

இப்பாதக செயலை செய்தவர்களை இந்த அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும்.

இது போன்ற தாக்குதலை இந்த அரசு இனிமேலும் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மாயிருக்காது (அப்ப இதுவரைக்கும் வேடிக்கை பார்த்திட்டு இருந்தாங்களானு கேட்க்க கூடாது).

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையும் செயல்பட வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு சிறுபாண்மையினர் மததோடு தொடர்பு கொண்டு பார்க்க கூடாது.

இது போன்ற கொடுரமான தாக்குதல்களில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு போது ஈடுபட மாட்டார்கள் ( இது திமுக ஸ்பெசல்)

இந்த சம்பவத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்

Anonymous says:

////வால்பையன் said...

இந்த கட்டுரையின் படி குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் தான் குண்டு வெடிக்கிறது என்பது போல் இருக்கிறது.
ப.ஜா.க ஆட்சியில் பொக்ரானில் பெரிய குண்டாக வெடித்தாரே அதை ஏன் சொல்லவில்லை///

i smile it :)

Anonymous says:

Here .. :)

http://nhisham.blogspot.com/2008/12/blog-post.html



//copied from behindwoods, however youtake to it people who don't know that site. you can just take the content and write on your own style, rather than just translating word by word.//

//Anonymous said...
This post has been removed by a blog administrator. //

some one post that liink and he delete that behindwoods like :)

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

இந்த கேவலத்தை கேவலம் என்று என்றுதான் நமது ஆட்சியாளர்கள் உணர்வார்களோ ?
முருகா அப்பாவி மக்களை இவர்களிடம் இருந்து காப்பாத்து !